பேனர் விழுந்து விபத்து - நூலிழையில் தப்பிய எடப்பாடி பழனிசாமி
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி யை வரவேற்று சாலையின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த வளைவு பேனர், அவர் கடந்து சென்ற சில நொடிகளில் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் எடப்பாடி பழனிசாமி நூலிழையில் தப்பினார். பேனர் விழுந்து காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமைச்சர் ஐ.பெரியசாமி கார்களில் சோதனை
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக மதுரை, திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டு வாயிலில் நிறுத்தப்பட்டுள்ள கார்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் சுமார் 10 மணி நேரமாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது.
நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் உடல் தகனம்
உடநலக்குறைவால் மரணமடைந்த இல.கணேசனின் உடல் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
முன்னதாக இல.கணேசன் உடலுக்கு முப்படை தலைவர்களால் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து 3 முறை 42 துப்பாக்கி குண்டுகளை வான் நோக்கி சுட்டு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இல.கணேசனின் உடலுக்கு குடும்பத்தார்கள் சார்பில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.
சேலம் புறப்பட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் புறப்பட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
வெளியானது அனுபமாவின் ஹாரர் பட டீசர்...திரைக்கு வருவது எப்போது?
மலையாள நடிகை அனுபமா நடித்துள்ள தெலுங்கு படமான 'கிஷ்கிந்தாபுரி'-ன் டீசர் வெளியாகி இருக்கிறது.
''டிரம்ப் - புதின் சந்திப்பை இந்தியா வரவேற்கிறது''
அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் புதின் இடையேயான அலாஸ்கா சந்திப்பை இந்தியா வரவேற்கிறது என்றும் ரஷ்யா - உக்ரைன் மோதலுக்கு விரைவில் முடிவு காண உலகம் விரும்புகிறது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
''பூமியில் மிகவும் மகிழ்ச்சியான தந்தை'' - அமிதாப் பச்சன்
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்றுவரும் சந்திய திரைப்பட விழாவில் அபிஷேக் பச்சன் 'ஐ வாண்ட் டி டாக்' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் விருதை பெற்றார்.
தெலுங்கில் அறிமுகமாகும் ''நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'' பட நடிகை
வருகிற 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள ''மேகலு செப்பின பிரேம கதா'' படத்தில், தனுஷ் இயக்கிய ''நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'' படத்தில் நடித்த ரபியா கத்தூன் கதாநாயகியாக நடித்துள்ளார். இதன் மூலம் அவர் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார்.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை
சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கிண்டி, ஈக்காட்டுதாங்கல், எழும்பூர், புரசைவாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகள் மழை பெய்து வருகிறது
"கூலி" படத்திற்கு சம்பளம் வாங்காத அமீர் கான் - ஏன் தெரியுமா?
கூலி படத்தில் நடித்ததற்காக அமிர் கான் ரூ.20 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக சமூக வலைதளத்தில் செய்தி பரவியது.
இதை மறுத்துள்ள அமீர் கான், “கூலி படத்துக்காக நான் சம்பளம் ஏதும் வாங்கவில்லை. ரஜினி சார் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருக்கிறேன். அவருடன் நடித்ததே எனக்குப் பெரிய பரிசுதான். அதனால் பணம் பற்றி யோசிக்கக் கூட முடியவில்லை“ என்று தெரிவித்துள்ளார்.