15 ரெயில்களுக்கு நாளை மறுநாள் முதல் புதிய நிறுத்தங்களுக்கு தெற்கு ரெயில்வே அனுமதி

15 ரெயில்களுக்கு நாளை மறுநாள் முதல் புதிய நிறுத்தங்களுக்கு தெற்கு ரெயில்வே அனுமதி அளித்துள்ளது.;

Update:2025-08-16 21:47 IST

திருவனந்தபுரம்,

தெற்கு ரெயில்வே சார்பில் திருவனந்தபுரம் கோட்ட தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாளை மறுநாள் (18-ந் தேதி) முதல் நாகர்கோவில்-கோயம்புத்தூர்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு சிங்கநல்லூர், இருகூர், ஆரல்வாய்மொழி, மேலப்பாளையம் ஆகிய ரெயில் நிலையங்களில் 1 நிமிட நிறுத்தம் அனுமதிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் மதுரை-புனலூர்-மதுரை எக்ஸ்பிரஸ் நாங்குநேரி, ஆரல்வாய்மொழியிலும், சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ஹரிப்பாட்டிலும், குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ஹரிப்பாடு, சிறையின் கீழ் நிலையத்திலும், தன்பாத்-ஆலப்புழை எக்ஸ்பிரஸ் குடியாத்தம், வாணியம்பாடியிலும், பாலக்காடு-திருச்சிராப்பள்ளி ரெயில் சிங்கநல்லூரிலும்,

நிலம்பூர்ரோடு-கோட்டயம்-நிலம்பூர் ரோடு எக்ஸ்பிரஸ் மேலாற்றூர், பட்டிகாடு, குலுக்கல்லூர் நிலையங்களிலும் 1 நிமிடம் நின்று செல்லும். மேலும், திருவனந்தபுரம் சென்ட்ரல்-வேரவல் எக்ஸ்பிரஸ் குயிலாண்டி, பய்யனூர் நிலையத்திலும், காரைக்கால்-எர்ணாகுளம்-காரைக்கால் ரெயிலுக்கு ஒற்றபாலத்திலும், நிலம்பூர் ரோடு-திருவனந்தபுரம் வடக்கு எக்ஸ்பிரஸ் திருவல்லாவிலும், மங்களூரு-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் திருவல்லாவிலும், கவுரா-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் கொடைக்கானல் ரோட்டிலும் 18-ந்தேதி முதல் புதிய நிறுத்தங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.

இதேபோல் நாகர்கோவில்-காந்திதாம் பிஜி எக்ஸ்பிரஸ் 19-ந் தேதி(புறப்படும்) முதல் குயிலாண்டி, பய்யனூர், காஞ்சன் காடு நிலையத்திலும், கன்னியாகுமரி-கவுரா எக்ஸ்பிரஸ் 23-ந் தேதி முதல் கொடைக்கானல் ரோட்டிலும், புதுச்சேரி-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் 24-ந் தேதி முதல் வள்ளியூர் நிலையத்திலும் நிறுத்தம் அனுமதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்