ராகுல் காந்தியின் வாக்குரிமையை தேர்தல் ஆணையம் ரத்து செய்யவேண்டும்: அர்ஜுன் சம்பத்
உலக அரங்கில் இந்தியா வல்லரசாக உருவாகி வருகிறது என்று அர்ஜுன் சம்பத் கூறினார்.;
திருப்பூர்,
திருப்பூரில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
உலக அரங்கில் இந்தியா வல்லரசாக உருவாகி வருகிறது. இதனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் பொறாமை கொண்டு பொருளாதாரத்தை சீர்குலைக்க இந்திய பொருட்கள் மீதான வரியை உயர்த்தியுள்ளார். அமெரிக்க, சீன பொருட்களை புறக்கணிப்போம். உள்நாட்டில் தயாராகும் பொருட்களையே வாங்குவோம்.
நாம் இந்திய நிறுவனங்களை ஆதரித்து பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். தமிழக அரசு, தூய்மைப்பணியாளர்கள் மீது அடக்குமுறையை ஏவி உள்ளது. அவர்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். திருப்பூரிலும் தூய்மை பணியை தனியாரிடம் ஒப்படைப்பதை கண்டிக்கிறோம்.
ராகுல்காந்தி எம்.பி. தொடர்ந்து தேர்தல் ஆணையத்தை விமர்சித்து வருகிறார். அவரது வாக்குரிமையை தேர்தல் ஆணையம் ரத்து செய்யவேண்டும். உண்மையிலேயே வாக்குகளை திருடுவது காங்கிரசும், திமுகவும்தான். கோவையில் அண்ணாமலை ஜெயித்துவிடக்கூடாது அவருக்கு வாக்களிப்பவர்களின் ஓட்டுகளை நீக்கினார்கள். இவ்வாறு அவர் கூறினார்."பாடத்திட்டத்தில் நீதிமன்றம் தலையிடாது" - மதுரை ஐகோர்ட்டு
தமிழக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை பாடமாக சேர்க்க, தமிழாசிரியர்களை நிரந்தர பணியமர்த்த கோரி மதுரை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, கேந்திரிய வித்யாலயா பாடதிட்டத்தில் நீதிமன்றம் தலையிடாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.