இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025

Update:2025-08-16 09:12 IST
Live Updates - Page 3
2025-08-16 10:07 GMT

சென்னையில் பள்ளி மாணவிக்கு கத்திகுத்து

சென்னை, பல்லாவரத்தில் 9-ம் வகுப்பு மாணவியை கத்தியால் வெட்டிவிட்டு கழுத்தை அறுத்து கொண்டு இளைஞர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். படுகாயமடைந்த மாணவியும், இளைஞரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாணவியின் பெற்றோர் அளித்த புகார் அடிப்படையில் திருவண்ணாமலையை சேர்ந்த செல்வம் மீது போக்சோ வழக்குபதிவு செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2025-08-16 09:59 GMT

அமெரிக்காவில் முதன்முறையாக ஏற்றப்பட்ட இந்திய தேசியக்கொடி

இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அமெரிக்காவின் சியாட்டில் நகரத்தின் அடையாளமான 'ஸ்பேஸ் நீடில்' கோபுரத்தில் முதன்முறையாக இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இது இரு நாடுகளின் நட்புறவை பறைசாற்றும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. சியாட்டிலில் உள்ள இந்திய துணைத் தூதரகம் இதை ஒரு வரலாற்று சிறப்புமிக்க முதல் நிகழ்வு என மகிழ்ச்சியுடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது.  

2025-08-16 09:55 GMT

தமிழகம் வருகிறார் அமித்ஷா

உள்துறை மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அடுத்த வாரம் தமிழகம் வர உள்ளார். 22ம் தேதி தமிழகம் வரும் அமித்ஷா நெல்லையில் நடைபெறும் பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

2025-08-16 09:34 GMT

அஜித் ரசிகர்களுக்கு அசத்தல் அப்டேட் கொடுத்த ஆதிக் 

"குட் பேட் அக்லி அஜித் ரசிகர்களுக்கான படமாக இருந்தது. 'ஏ.கே 64' அனைத்து தரப்பினரும் விரும்பும் பொழுதுபோக்கு படமாக இருக்கும்" என்று சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஆதிக் கூறினார்.


2025-08-16 09:30 GMT

சென்னையில் அமலாக்கத்துறையினர் மீது வழக்குப்பதிவு

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக அமலாக்கத்துறையினர் மீது திருவல்லிக்கேணி போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர். சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

2025-08-16 09:28 GMT

திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்

ஆடி கிருத்திகை மற்றும் கிருஷ்ணர் ஜெயந்தி தொடர் விடுமுறையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்துள்ளனர். சுமார் 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

2025-08-16 09:26 GMT

இல.கணேசன் உடலுக்கு முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் அஞ்சலி

மறைந்த நாகாலாந்து கவர்னரும் பாஜக மூத்த தலைவருமான இல.கணேசன் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பிரதமர் சார்பிலான மலர் வளையத்தை முதல்-அமைச்சரும், தமிழ்நாடு அரசு சார்பிலான மலர் வளையத்தை துணை முதல்-அமைச்சரும் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

2025-08-16 09:24 GMT

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது


2025-08-16 09:09 GMT

ராஷ்மிகாவின் ஹாரர் படத்தில் மேலும் 2 கதாநாயகிகள்...?

''தாமா'' படத்தில் மலைக்கா அரோரா மற்றும் நோரா பதேகி சிறப்புப் பாடல்களில் நடனமாடி உள்ளதாக கூறப்படுகிறது. 

2025-08-16 08:26 GMT

உக்ரைன் போர் நிறுத்தம்: டிரம்பை சந்திக்கும் ஜெலன்ஸ்கி


அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை வாஷிங்டனில் வரும் 18ம் தேதி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திக்க உள்ளார்.

இந்த சந்திப்பின்போது உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக, டிரம்ப் உடன் ஜெலன்ஸ்கி ஆலோசனை செய்ய உள்ளார் என்று கூறப்படுகிறது.

அலாஸ்காவில் ரஷிய அதிபர் புதினுடன் டிரம்ப் ஆலோசனை நடத்திய நிலையில் ஜெலன்ஸ்கியை தற்போது சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்