பாமக நிறுவனர், தலைவராக ராமதாஸ் நீடிப்பார்: பொதுக்குழுவில் அன்புமணிக்கு எதிராக அதிரடி தீர்மானங்கள்

சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்கும் அதிகாரத்தை ராமதாசுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.;

Update:2025-08-17 12:46 IST

திண்டிவனம்,

புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் உள்ள சங்கமித்ரா அரங்கில் பா.ம.க.வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ராமதாசின் மகள் காந்திமதி கலந்து கொண்டுள்ளார். மேலும் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் என 4,000 பேர் பங்கேற்றுள்ளனர்.

பாமக விதிகளில் திருத்தம் செய்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அன்புமணிக்கு எதிராக தீர்மானம் உட்பட, பொதுக்குழுவில் மொத்தம் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதில் முக்கிய அம்சமாக, பாமக நிறுவனர், தலைவராக ராமதாசை தேர்வுசெய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் விபரம் பின்வருமாறு;

* சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்கும் அதிகாரம் ராமதாசுக்கு வழங்கப்படுகிறது.

* ராமதாசை தவிர வேறு யாரும் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது

* அனைத்து தேர்தல்களிலும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் அதிகாரம் ராமதாசுக்கு வழங்கப்படுகிறது.

* பொதுக்குழுவுக்கு நிறுவனர் அழைக்கப்பட வேண்டும் என திருத்தம் செய்து  தீர்மானம் நிறைவேற்றம்

* பாமக அமைப்பு ரீதியாக 35-வது விதியை தொடங்கி தீர்மானம் நிறைவேற்றம்

* வன்னியர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் 10.5% தனி இட ஒதுக்கீட்டிற்கு சட்டம் ஆக்கப்பட்டும் நிறைவேற்றாமல் இருப்பதற்கு பாமக நிறுவனர் தலைமையில் மீண்டும் போராட்டம்.

* தமிழக அரசு தட்டி கழிக்காமல் உடனடியாக ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் 

இவ்வாறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

முன்னதாக கட்சியின் நிறுவனர் ராமதாசால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகளை அன்புமணி கட்சியில் சேர்ப்பதாக அறிவித்தார். இதன்படி இருவரும் மாறி மாறி அறிவிப்பு வெளியிட்டு வருவதால் பாமகவினர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. பாமக இரு அணிகளாக செயல்பட்டு வருவதால், யாருடன் நிற்பது என்று தொண்டர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்