நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை உயர்வு

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு தினசரி முட்டை கொள்முதல் விலையை நிர்ணயம் செய்து வருகிறது.;

Update:2025-08-17 20:59 IST

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 7 கோடிக்கும் மேற்பட்ட முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றின் மூலம் தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள், தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு தினசரி முட்டை கொள்முதல் விலையை நிர்ணயம் செய்து வருகிறது.

இந்த நிலையில், நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.490-லிருந்து ரூ.4.95ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் முட்டை கொள்முதல் விலை ரூ.5.50 ஆக நிர்ணயம் செய்து தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்