குருவிக் கூட்டை எடுக்கச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம்

குருவிக்கூட்டை எடுக்க சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.;

Update:2025-08-17 18:50 IST

நாமக்கல் .

நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள செல்லப்பம்பாளையத்தை சேர்ந்தவர் ரகுநாதன். டிரைவர். இவரது 9 வயது மகன் சஞ்சய் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுவன் வீட்டின் அருகே இன்று விளையாடிக்கொண்டிருந்தார்.

அப்போது அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரில் குரிவி கூடு ஒன்று கட்டியிருந்தது. சிறுவன் அந்த கூட்டியை எடுக்க டிரான்ஸ்பார்மரில் ஏறினார். இதில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து சிறுவன் படுகாயம் அடைந்தார். சிறுவனை அருகில் இருந்தவர்கள் பரமத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சஞ்சய் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குருவிக்கூட்டை எடுக்க சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்