பாஜகவின் துணை ஜனாதிபதி வேட்பாளராக சிபி ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டது பெருமகிழ்ச்சி - அண்ணாமலை
அண்ணன் சிபி ராதாகிருஷ்ணனுக்கு, எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழக முன்னால் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
நாட்டின் புதிய குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக, தேசிய ஜனாயகக் கூட்டணியின் சார்பாக, மராட்டிய மாநில கவர்னர், அன்பு அண்ணன் சிபி ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டிருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழக பாஜக தலைவராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும், அண்ணன் சிபி ராதாகிருஷ்ணன் செய்த மக்கள் பணிகள், போற்றுதலுக்குரியவை. ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மாநிலங்களின் கவர்னராகவும், வெகுசிறப்பாகப் பணியாற்றிய பெருமைக்குரியவர்.
குடியரசுத் துணைத் தலைவராக அவர் வெகு சிறப்பாக மாநிலங்களைவையும், நாட்டையும் வழிநடத்துவார் என்பது உறுதி. அண்ணன் சிபி ராதாகிருஷ்ணனுக்கு, எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.