ஒண்டிவீரன் நினைவு தினம்: 20-ம் தேதி அதிமுக சார்பில் மரியாதை

ஒண்டிவீரனின் 254-வது நினைவு தினத்தையொட்டி 20-ம் தேதி அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்படுகிறது.;

Update:2025-08-17 21:49 IST

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

இந்திய முதல் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 254-வது வீரவணக்க நினைவு நாளான 20.8.2025 (புதன்கிழமை) காலை, அதிமுக சார்பில், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் அமைந்துள்ள ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருஉருவச்சிலைக்கு, முன்னாள் அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி, முன்னாள் எம்.பி. என்.சந்திரசேகரன் உள்ளிட்ட அம்மாவட்டத்தைச் சேர்ந்த கழகச் செயலாளர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, திருநெல்வேலி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் தச்சை என். கணேசராஜா சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அதனைத் தொடர்ந்து, தென்காசி மாவட்டம், சிவகிரி தாலுகா, நெல்கட்டும் செவலில் அமைந்துள்ள ஒண்டிவீரன் நினைவுத் தூணுக்கு முன்னாள் அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி, முன்னாள் எம்.பி. என்.சந்திரசேகரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தென்காசி வடக்கு மாவட்டக் கழக செயலாளர் சி.கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனுக்கு மரியாதை செலுத்தும் இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாநகர், தென்காசி வடக்கு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்