நீலகிரியில் டைடல் பூங்கா - டெண்டர் வெளியீடு

இந்த டைடல் பூங்கா மூலம் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.;

Update:2025-08-17 17:25 IST

நீலகிரி,

தகவல் தொழில் நுட்பத்தை இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கு கொண்டு செல்லும் வகையில் தமிழ்நாட்டில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார்.

இதில் முதற்கட்டமாக விழுப்புரம், தூத்துக்குடி. வேலூர் மற்றும் திருப்பூர் ஆகிய நகரங்களில் மினி டைடல் பூங்காக்களை டைடல் பார்க் நிறுவனம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, சேலம், வேலூர், நீலகிரி மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான முதல் கட்டப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நீலகிரி, குன்னுார், எடப்பள்ளி அருகே 8 ஏக்கரில் அமையவுள்ள டைடல் பூங்கா கட்டுமான பணிக்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டைடல் பூங்கா மூலம் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்