அன்புமணி மீது விரைவில் நடவடிக்கை? - ஜி.கே.மணி பதில்

தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத கட்சி பாமக என்று ஜி.கே.மணி கூறினார்.;

Update:2025-08-17 16:48 IST

சென்னை,

பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு பின் கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ஒழுங்கு நடவடிக்கை குழு என்பது டாக்டர் ராமதாசால் அமைக்கப்பட்டது. அவர்கள் தயாரித்து கொடுத்த அறிக்கையை வேறுஒருவர் படிக்க இருந்த நிலையில், ராமதாசின் பரிந்துரையின் பேரில் நான் படித்தேன். ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிக்கை டாக்டர் ராமதாசிடமும் கொடுக்கப்பட்டுள்ளது. அதை அவர் படித்துவிட்டு குழு அளித்த பரிந்துரையின்படி அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பார? அல்லது என்ன செய்யப்போகிறார்? என்பது தெரியவில்லை; அவருக்கு தான் அந்த அதிகாரம் உள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சி டாக்டர் ராமதாஸ் என்ற ஒற்றை மனிதரால் உருவாக்கப்பட்டது. அவர் தான் வன்னியர் சங்கம் தொடங்கி, 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று பட்டிதொட்டி எல்லாம் சோறு, தண்ணீர் இல்லாமல் ஓடி ஓடி உழைத்து உருவாக்கப்பட்டு இன்றைக்கு பாட்டாளி மக்கள் கட்சியாக வளர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத கட்சியாக இருந்த பாமகவில் இடையில் நெருக்கடிகள், குழப்பமான சூழல் நிலவியுள்ளது.

இந்த சூழலில்தான் இன்றைய பொதுக்குழு கூட்டம் கூடியது. சமூக வலைதளங்களில் வரக்கூடிய செய்திகள் நல்லதல்ல. பொதுவாக அனைத்துக் கட்சிகளிலும் உட்கட்சி பூசல் ஏற்படுவது வழக்கம்தான். அப்படி எந்த சூழநிலையில் நிகழ்ந்தாலும் உண்மையான கட்சிகாரர்கள், உறுதியான கட்சிகாரர்கள், கட்சிக்குள் இருப்பவர்களை பற்றியே விமர்சனம் செய்து செய்தி போடக்கூடாது; அது நல்லதல்ல. அதனால் மற்றவர்கள் மனது புண்படும்; மனிதனுடைய மனவலி என்பது சாதாரணமானது அல்ல; எனவே அப்படி செய்திபோடுவதால் கட்சி வளராது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்