மருத்துவ மாணவர் சேர்க்கை; இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் - அருண் ஐ.பி.எஸ். எச்சரிக்கை

மதிப்பெண்கள் மற்றும் தரவரிசைப்பட்டியல் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.;

Update:2025-08-17 12:45 IST

சென்னை,

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என மத்திய குற்றப்பிரிவு அறிவுரை வழங்கியுள்ளது. இது தொடர்பான குறைதீர் கூட்டத்தில் பேசிய ஐ.பி.எஸ். அதிகாரி அருண், மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக கூறும் இடைத்தரகர்களை நம்பாதீர்கள் என அறிவுறுத்தியுள்ளார்.

மருத்துவ படிப்பு குறித்த சந்தேகங்களுக்கு கல்லூரிகளில் உள்ள நேரடி சேர்க்கை மையத்தை தொடர்பு கொண்டு ஆலோசனை பெற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். மருத்துவ மாணவர் சேர்க்கையானது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண்கள் மற்றும் தரவரிசைப்பட்டியல் அடிப்படையிலானது என்றும், அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நடத்தப்படும் கலந்தாய்வு மூலம் மட்டுமே மருத்துவம் படிக்க இடம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்