‘பொன்னியின் செல்வனைப் போல் திராவிட மாடல் ஆட்சி தொடரும்’ - அமைச்சர் ரகுபதி

அமித்ஷா எத்தனை முறை தமிழகத்திற்கு வந்தாலும் எங்களுக்கு அச்சமில்லை என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.;

Update:2025-08-17 11:25 IST

சென்னை,

புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது த.வெ.க. மாநாடு, அமித்ஷாவின் வருகை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

“எந்த தாக்கத்தையும் யாராலும் ஏற்படுத்த முடியாது. தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியின் இரண்டாம் பாகம் தொடரும், மூன்றாம் பாகம் தொடரும். அது பொன்னியின் செல்வனைப் போல் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.

அமித்ஷாவால் தமிழகத்திற்கு வந்து எந்த வியூகத்தையும் வகுக்க முடியாது. தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்கவே அவர்கள் தடுமாறுகிறார்கள். எனவே அமித்ஷா எத்தனை முறை தமிழகத்திற்கு வந்தாலும் எங்களுக்கு அச்சமில்லை.

போலி வாக்காளர்களை சேர்க்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அசல் வாக்காளர்கள் தங்கள் அசல் வாக்குகளை செலுத்தினாலே போதும். எங்களுக்கு போலி வாக்காளர்கள் தேவையில்லை.”

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Full View
Tags:    

மேலும் செய்திகள்