இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025

Update:2025-08-16 09:12 IST
Live Updates - Page 5
2025-08-16 06:37 GMT

தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் வருமானம் 5 மடங்கு அதிகரிப்பு

தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் வருமானம் 2020-21ம் ஆண்டுகளில் ரூ.49.11 கோடியாக இருந்த நிலையில், 2023-24ம் ஆண்டுகளில் சுமார் 5 மடங்கு உயர்ந்து ரூ.243.31 கோடியாக அதிகரித்துள்ளது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 2022ம் ஆண்டு 1.4 லட்சமாக நிலையில், 2023ம் ஆண்டு 11.7 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-08-16 06:30 GMT

ஜனாதிபதிக்கு காலக்கெடு - பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு


மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஜனாதிபதி, கவர்னருக்கு காலக்கெடு விதித்த விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதில் தாக்கல் செய்துள்ளது.

மசோதா விவகாரத்தில் கவர்னர்கள், ஜனாதிபதிக்கு காலக்கெடு விதிப்பது அரசமைப்பு குழப்பத்துக்கு இட்டுச் செல்லும் என்றும், சோதா விவகாரத்தை அரசியல் ரீதியாகவும், அரசமைப்பு முறையிலும் தீர்க்க வேண்டுமே தவிர, நீதிமன்ற தலையீட்டைக் கொண்டு தீர்க்கக் கூடாது என்றும் சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

2025-08-16 06:25 GMT

ரஷியாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி; இந்தியா மீது கூடுதல் வரி விதிக்கப்படாது - டொனால்டு டிரம்ப்


இந்தியா மீது கூடுதல் வரி விதிக்கப்படாது என டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். முன்னதாக புதினை சந்திக்க செல்லும் முன்பு விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா இருக்கிறது. சீனாவும் அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்கிறது. இந்த நாடுகள் மீது நான் கூடுதல் வரி விதித்தால், அது ரஷியாவுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தலாம். அதை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டால் நான் செய்வேன். ஆனால் தற்போது அவ்வாறு வரி விதிக்கப்பட வாய்ப்பு இல்லை என்று கூறலாம்" என்றார்.

2025-08-16 05:55 GMT

சென்னை மெட்ரோவில் ஒரே நாளில் 4.06 லட்சம் பேர் பயணம்


விடுமுறை தினம் (சுதந்திர தினம்) என்பதால், மெட்ரோ ரெயிலில் நேற்று மட்டும் 4,06,066 பேர் பயணம் செய்துள்ளனர். இது மெட்ரோவில் ஒரு நாளில் பயணம் செய்தவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை ஆகும். இதற்கு முன்பு, கடந்த அக்டோபரில் சென்னையில் நடைபெற்ற விமான படை சாகச நிகழ்ச்சியை மக்கள் காண வந்தபோது. மெட்ரோவில் மட்டும் 4 லட்சம் பேர் பயணம் செய்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.


2025-08-16 05:54 GMT

கூலி படம்: 2 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா?


'கூலி' திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகளவில் ரூ.151 கோடி வசூலைக் குவித்து விஜய்யின் லியோ படத்தின் முதல் நாள் வசூலை முந்தியுள்ளது.


2025-08-16 05:53 GMT

இந்தித் திணிப்பும் தமிழ் ஒழிப்புமே ரெயில்வேயின் இரட்டை தண்டவாளங்களாக இருக்கிறது - சு.வெங்கடேசன்


தெற்கு ரெயில்வே இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வுக்கு நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்துவிட்டு, தமிழ் கேள்வித்தாளுடன் மறுதேர்வு நடத்த வேண்டும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். 


2025-08-16 05:48 GMT

சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த் - ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

திரை உலகில் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து, இருமுறை பத்ம விபூஷன் விருது, திரையுலகின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது உட்பட பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார். இந்த நிலையில், சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்துக்கு தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



2025-08-16 05:46 GMT

அறத்தைப் போற்றி, தர்மத்தை நிலைநாட்டிட உறுதியேற்போம் - எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-

காக்கும் கடவுளாம் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த இத்திருநாளை 'கிருஷ்ண ஜெயந்தி" என்றும்; 'கோகுலாஷ்டமி' என்றும் உள்ளம் மகிழ்ந்து கொண்டாடும் இந்த நன்னாளில், மக்கள் அனைவருக்கும் எனது இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-08-16 05:44 GMT

விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா இன்று இந்தியா வருகை


விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா இன்று இந்தியாவிற்கு வருகை தருகிறார். இன்று மாலை இந்தியாவிற்கு வரும் சுபான்ஷு" சுக்லா, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். பின்னர் தனது சொந்த ஊரான லக்னோவிற்கு சென்று குடும்பத்தினரோடு சில நாட்கள் தங்கியிருப்பார் எனவும், ஆகஸ்ட் 23-ந்தேதி டெல்லியில் நடைபெறும் தேசிய விண்வெளி நாள் கொண்டாட்டத்தில் சுபான்ஷு சுக்லா கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


2025-08-16 05:32 GMT

இல.கணேசன் மறைவு: நாகாலாந்தில் 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு


நாகாலாந்து கவர்னரும், பாஜக மூத்த தலைவருமான இல.கணேசனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இன்று (ஆகஸ்ட் 16) முதல் ஆகஸ்ட் 22ம்தேதி வரை நாகாலாந்து மாநிலம் முழுவதும் 7 நாட்கள் அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.


Tags:    

மேலும் செய்திகள்