சென்னை மெட்ரோவில் ஒரே நாளில் 4.06 லட்சம் பேர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025

சென்னை மெட்ரோவில் ஒரே நாளில் 4.06 லட்சம் பேர் பயணம்


விடுமுறை தினம் (சுதந்திர தினம்) என்பதால், மெட்ரோ ரெயிலில் நேற்று மட்டும் 4,06,066 பேர் பயணம் செய்துள்ளனர். இது மெட்ரோவில் ஒரு நாளில் பயணம் செய்தவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை ஆகும். இதற்கு முன்பு, கடந்த அக்டோபரில் சென்னையில் நடைபெற்ற விமான படை சாகச நிகழ்ச்சியை மக்கள் காண வந்தபோது. மெட்ரோவில் மட்டும் 4 லட்சம் பேர் பயணம் செய்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.


Update: 2025-08-16 05:55 GMT

Linked news