ரஷியாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி; இந்தியா மீது... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025

ரஷியாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி; இந்தியா மீது கூடுதல் வரி விதிக்கப்படாது - டொனால்டு டிரம்ப்


இந்தியா மீது கூடுதல் வரி விதிக்கப்படாது என டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். முன்னதாக புதினை சந்திக்க செல்லும் முன்பு விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா இருக்கிறது. சீனாவும் அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்கிறது. இந்த நாடுகள் மீது நான் கூடுதல் வரி விதித்தால், அது ரஷியாவுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தலாம். அதை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டால் நான் செய்வேன். ஆனால் தற்போது அவ்வாறு வரி விதிக்கப்பட வாய்ப்பு இல்லை என்று கூறலாம்" என்றார்.

Update: 2025-08-16 06:25 GMT

Linked news