அறத்தைப் போற்றி, தர்மத்தை நிலைநாட்டிட... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025
அறத்தைப் போற்றி, தர்மத்தை நிலைநாட்டிட உறுதியேற்போம் - எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-
காக்கும் கடவுளாம் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த இத்திருநாளை 'கிருஷ்ண ஜெயந்தி" என்றும்; 'கோகுலாஷ்டமி' என்றும் உள்ளம் மகிழ்ந்து கொண்டாடும் இந்த நன்னாளில், மக்கள் அனைவருக்கும் எனது இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-08-16 05:46 GMT