இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-07-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 12 July 2025 1:07 PM IST
ராமதாஸ் இல்லத்தில் ஒட்டுகேட்பு கருவி வைத்தது யார்? விசாரணை வேண்டும் - வழக்கறிஞர் கே.பாலு
பாட்டாளி மக்கள் கட்சி செய்தித்தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், "விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இல்லத்தில் ஒட்டுக்கேட்பு கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதாக வெளியாகி உள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அப்படி ஒரு முயற்சி நடந்திருந்தால் அது கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 12 July 2025 1:05 PM IST
ஓ.டி.டி.யில் வெளியானது மாதவனின் புதிய படம்
சுவாரஸ்யமாக காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள 'ஆப் ஜெய்சா கோய்' படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது. அதாவது, இப்படம் நேற்று நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
- 12 July 2025 1:02 PM IST
கூட்டணி ஆட்சி குறித்து அமித்ஷாவின் கருத்து.. எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் என்ன..?
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் என்று மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்திருந்தார்.
இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்” என்று தெரிவித்தார்.
முன்னதாக கலந்தாய்வு கூட்டத்தில் பேசிய அவர், “எங்கள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தது. தற்போது போதைப் பொருள் விவகாரங்கள் - சட்டம் ஒழுங்கு சரியில்லை, மிக மோசமான நிலைக்கு தமிழகம் சென்று விட்டது.
கடலூர் பேருந்து நிலையம் மக்கள் எதிர்பை மீறி வேறு இடத்திற்கு கொண்டு செல்லும் முடிவுக்கு கடும் கண்டனம். அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் பேருந்து நிலையத்தை அமைக்க வேண்டும். பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து 15ம் தேதி கடலூரில் நடைபெற உள்ள போராட்டத்திற்கு அதிமுக முழு ஆதரவு தெரிவித்துக்கொள்கிறது” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
- 12 July 2025 12:18 PM IST
தஞ்சாவூரில் குளத்தில் மூழ்கி பலியான 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி
தஞ்சாவூரில் குளத்தில் மூழ்கி பலியான 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
- 12 July 2025 12:16 PM IST
அதிர்ச்சி சம்பவம்.. சுற்றுலா சென்ற ரவுடி கழுத்தறுத்து கொலை
ரவுடி சிவமணியை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டிய கூட்டாளிகள், கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று போதையில் இருந்த சிவமணியை காருக்குள் வைத்து கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 12 July 2025 12:15 PM IST
பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை - தமிழக வெற்றிக் கழகம் திட்டவட்டம்
பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருப்பதாக தமிழக வெற்றிக் கழகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியாகி உள்ள தகவல்படி, “மக்களால் வெறுக்கப்படும் பாஜகவுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை என செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டு விட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் மட்டுமே கூட்டணி. விஜய் முதல்-அமைச்சர் வேட்பாளர் என்பதில் உறுதி. செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் எப்போதும் மாற்றமில்லை” என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சி என அமித்ஷா சூசகமாக கூறிய நிலையில் தவெக இந்த விளக்கத்தை அளித்துள்ளது.
- 12 July 2025 11:25 AM IST
தமிழ்நாட்டில் 'கூட்டணி ஆட்சி' - அமித்ஷா மீண்டும் திட்டவட்டம்
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் 2026ல் தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பாகவும் பேசியிருக்கிறார். அப்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் வருவதற்கான சாத்திய கூறுகள் இருக்கிறதா? அதேபோல பாமக மற்றும் இதர சிறு கட்சிகள் கூட்டணிக்கு வருமா? என்று அமித்ஷாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
- 12 July 2025 11:22 AM IST
தஞ்சை அருகே அதிர்ச்சி.. குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த சோகம்
தஞ்சாவூர், திருவேங்கட உடையான்பட்டி பகுதியில் உள்ள குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 12 July 2025 11:20 AM IST
டி20 உலககோப்பை 2026: முதல் முறையாக தகுதி பெற்று இத்தாலி அணி சாதனை
ஐரோப்பா பகுதி தகுதிச்சுற்றில், நெதர்லாந்து, இத்தாலி, ஜெர்ஸி ஆகிய அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது. இந்நிலையில், கடைசி நேரத்தில், இத்தாலிக்கு எதிராக 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்று, நெதர்லாந்து அணி அனைத்து போட்டிகளிலும் வென்ற அணியாக, ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு தகுதிபெற்றது.
- 12 July 2025 11:15 AM IST
குஜராத்: பாலங்களின் இணைப்புகள் நொறுங்கியதே விபத்துக்கு காரணம் - விசாரணையில் தகவல்
குஜராத்தில் ஆற்றுப் பாலம் இடிந்த விபத்துக்கு அதன் 'பெடெஸ்டல், ஆர்டிகுலேஷன்' என்ற இணைப்புகள் நொறுங்கியதே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் எதிரொலியாக மாநிலத்தில் உள்ள சுமார் 7,000 பாலங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. விபத்து நடத்தில் இடத்தில் மாநில சுகாதார மந்திரி ருஷிகேஷ் படேல் நேரில் ஆய்வு செய்தார்.