
கூட்டணி ஆட்சி குறித்து அமித்ஷாவின் கருத்து.. எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் என்ன..?
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் என்று மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்திருந்தார்.
இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்” என்று தெரிவித்தார்.
முன்னதாக கலந்தாய்வு கூட்டத்தில் பேசிய அவர், “எங்கள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தது. தற்போது போதைப் பொருள் விவகாரங்கள் - சட்டம் ஒழுங்கு சரியில்லை, மிக மோசமான நிலைக்கு தமிழகம் சென்று விட்டது.
கடலூர் பேருந்து நிலையம் மக்கள் எதிர்பை மீறி வேறு இடத்திற்கு கொண்டு செல்லும் முடிவுக்கு கடும் கண்டனம். அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் பேருந்து நிலையத்தை அமைக்க வேண்டும். பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து 15ம் தேதி கடலூரில் நடைபெற உள்ள போராட்டத்திற்கு அதிமுக முழு ஆதரவு தெரிவித்துக்கொள்கிறது” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.