இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-07-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 12 July 2025 7:58 PM IST
தமிழகத்தில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று என்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிதமான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ராமநாதபுரத்திலும் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 12 July 2025 7:46 PM IST
த.வெ.க. போராட்டத்திற்கு 16 நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, ஆர்ப்பாட்டத்தின்போது, பைக் பேரணி செல்ல கூடாது, ஊர்வலம் நடத்த கூடாது, பட்டாசுகளை வெடிக்க கூடாது என 16 நிபந்தனைகள் காவல் துறை தரப்பில் அறிவுறுத்தலாக வழங்கப்பட்டு உள்ளது.
- 12 July 2025 7:17 PM IST
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஈரோட்டில் இருந்து மாலை 5.35 மணிக்கு புறப்பட்டு இரவு 10.20 மணிக்கு ஜோலார்பேட்டை செல்லும் பயணிகள் ரெயில் (வண்டி எண்.56812), அதற்கு மாற்றாக, ஈரோட்டில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு ஜோலார்பேட்டை சென்றடையும்.
இதேபோல, திருச்சியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு ஈரோடு செல்லும் பயணிகள் ரெயில்(56105), அதற்கு மாற்றாக திருச்சியில் இருந்து மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு ஈரோடு செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 12 July 2025 4:48 PM IST
தமிழகத்தில் கடந்த நான்கு வருடங்களில் லாக்கப்பில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கேட்கும் வகையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை வைத்து, தமிழக வெற்றி கழகம் கட்சி சார்பில் நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் சென்னை சிவானந்தா சாலையில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறுகிறது.
இந்நிலையில், லாக்கப் மரணங்கள் தொடர்பாக, பலியானவர்களின் குடும்பத்தினரை, த.வெ.க. தலைவர் விஜய் இன்று நேரில் சந்தித்து பேசி வருகிறார்.