இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 27-11-2025


LIVE
தினத்தந்தி 27 Nov 2025 9:22 AM IST (Updated: 27 Nov 2025 7:05 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • பிறந்த குழந்தை சடலமாக மீட்பு
    27 Nov 2025 7:05 PM IST

    பிறந்த குழந்தை சடலமாக மீட்பு

    கோவை காளப்பட்டி - வீரியம் பாளையம் செல்லும் சாலையில் பிறந்த குழந்தையின் உடல் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. உடலின் இடுப்புக்கு கீழானபகுதி இல்லாத நிலையில் பலத்த காயங்களுடன் சடலமாக குழந்தை மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவில்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • உதகை அருகே ஆட்கொல்லிப் புலியைப் பிடிக்க 5 கூண்டுகள் அமைப்பு
    27 Nov 2025 6:43 PM IST

    உதகை அருகே ஆட்கொல்லிப் புலியைப் பிடிக்க 5 கூண்டுகள் அமைப்பு

    உதகை: பெண்ணை அடித்துக் கொன்ற T37 என்ற புலியைப் பிடிக்க ஒரு பிரமாண்ட கூண்டு உள்பட 5 கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. புலிக்கு 12 வயது இருக்கலாம் என மதிப்பீடு. புலியை கண்காணிக்கும் பணியில் 40க்கும் மேற்பட்ட வனத்துறையினர் களத்தில் உள்ளனர்.

  • வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால்... அர்ச்சனா பட்நாயக் பதில்
    27 Nov 2025 6:33 PM IST

    வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால்... அர்ச்சனா பட்நாயக் பதில்

    தமிழ்நாட்டில் இன்று மாலை 3 மணி நிலவரப்படி 97.43 சதவீத பேருக்கு எஸ்.ஐ.ஆர் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களில் 70.70 சதவீத விண்ணப்பங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    டிசம்பர் 9ம் தேதி வெளியாக உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால், படிவம் 6 உடன் உறுதிமொழி படிவத்தை இணைத்து பட்டியலில் புதிதாக பெயரை சேர்க்க வேண்டும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.

  • சூறைக்காற்றால் பாம்பன் பாலம் அருகே நின்ற ரெயில்; பயணிகள் தவிப்பு
    27 Nov 2025 6:01 PM IST

    சூறைக்காற்றால் பாம்பன் பாலம் அருகே நின்ற ரெயில்; பயணிகள் தவிப்பு

    ராமேஸ்வரம் ரெயில் நிலையத்தில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற வாரந்திர ரெயில் பாம்பன் பாலத்தில் வீசிய சூறைக்காற்று காரணமாக நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து காற்றி வேகம் குறைந்து 20 நிமிடங்களுக்கு பிறகு சிக்னல் வந்ததால் ரெயில் மீண்டும் புறப்பட்டு சென்றது. காற்றின் வேகம் அதிகம் இருந்ததால் பாலத்தில் ரெயில் செல்ல சிக்னல் வழங்கப்படாது. சுமார் 20 நிமிடம் பாம்பன் பாலத்தில் ரெயில் நின்றதால் பயணிகள் பரிதவித்தனர்.

  • சென்னை சிறுமி கொலை: தமிழக அரசின் மனு தள்ளுபடி
    27 Nov 2025 5:55 PM IST

    சென்னை சிறுமி கொலை: தமிழக அரசின் மனு தள்ளுபடி

    சென்னை போரூரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கு. தஷ்வந்த் விடுதலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்டு.

  • சொத்துக்குவிப்பு வழக்கு: அமைச்சர் பெரிய கருப்பன் விடுவிப்பு
    27 Nov 2025 5:34 PM IST

    சொத்துக்குவிப்பு வழக்கு: அமைச்சர் பெரிய கருப்பன் விடுவிப்பு

    சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பெரிய கருப்பனை விடுவித்தது சிவகங்கை மாவட்ட நீதிமன்றம். அமைச்சர் பெரியகருப்பன், அவரது தாய், மனைவி பிரேமா, மகன் கோகுல கிருஷ்ணன், மைத்துனர் விடுதலை. செய்யப்பட்டனர். 2006 முதல் 2011 வரை அமைச்சராக இருந்தபோது வருவாய்க்கு அதிகமாக ரூ.1.20 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

  • 27 Nov 2025 4:59 PM IST

    டிட்வா புயல் எங்கே கரையை கடக்கும்..? வானிலை ஆய்வு மைய இயக்குநர் கொடுத்த அப்டேட்

    தென்மேற்கு வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு டிட்வா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கே சுமார் 700 கிலோ மீட்டர் தொலைவில் டித்வா புயம் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழகம் புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி நகர்ந்து 30-ந்தேதி அதிகாலை கரையை கடக்கும்.

    அடுத்த 24 மணிநேரத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

  • 27 Nov 2025 4:16 PM IST

    அறநிலையத்துறை சார்பில் 25 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்-அமைச்சர்

    இந்து சமய அறநிலையத்துறையானது தனது கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு, குடமுழுக்குகள் நடத்துதல், பழமையான திருக்கோயில்களை அதன் தொன்மை மாறாமல் புனரமைத்து பாதுகாத்தல், திருத்தேர் மற்றும் திருக்குளங்களை சீரமைத்தல், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், சட்டமன்ற மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட அறிவிப்புகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.

  • 27 Nov 2025 3:58 PM IST

    கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், கைது செய்யப்பட்ட 3 பேரை, 3 நாட்கள் விசாரிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், 3 பேருக்கு ஒரு நாள் காவல் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.

  • 27 Nov 2025 3:48 PM IST

    போட்டி தேர்வர்களுக்கான ஒரு அரிய வாய்ப்பு: சென்னையில் நேரடி பயிற்சி வகுப்புகள்

    வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், உளவியல் பகுப்பாய்வு சோதனைகளுடன் கூடிய வழிகாட்டுதல், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல், போட்டி தேர்வுகளுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகள், கல்வி தொலைக்காட்சி வாயிலாக போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

1 More update

Next Story