இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-11-2025

கோப்புப்படம்
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 23 Nov 2025 12:56 PM IST
திமுக ஆட்சி சமூகநீதியின் இருண்ட காலம்: அன்புமணி ராமதாஸ்
பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை திமுக அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
- 23 Nov 2025 12:41 PM IST
மெட்ரோ ரெயில் திட்டத்தை வைத்து மு.க.ஸ்டாலின் அரசியல் செய்கிறார்: அண்ணாமலை
கோவை-மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தை வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்கிறார் என்றும், தமிழகத்திற்கு இரண்டு முறை வந்த பிரதமர் மோடியை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே சந்தித்திருக்கலாம். ஏன் சந்திக்கவில்லை? என்றும் திருச்சியில் பாஜக செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
- 23 Nov 2025 12:38 PM IST
‘தி.மு.க.வின் கொள்கையே கொள்ளைதான்’ - மக்கள் சந்திப்பு கூட்டத்தில் விஜய் பேச்சு
தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற லட்சியத்துடன் அரசியலுக்கு வந்திருக்கிறேன் என விஜய் தெரிவித்தார்.
- 23 Nov 2025 12:37 PM IST
காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி: இந்திய வீராங்கனை தங்கம் வென்றார்
காது கேளாதோருக்கான 25-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் துப்பாக்கி சுடுதலில் நேற்று நடந்த பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) போட்டியின் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை மஹித் சந்து 456 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.
- 23 Nov 2025 11:46 AM IST
நாங்கள் ஆட்சிக்கு வந்தால்.. - தவெக தலைவர் விஜய் பேச்சு
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது:-
அண்ணா ஆரம்பித்த கட்சியை அதற்குப் பிறகு கைப்பற்றியவர்கள் என்னவெல்லாம் பண்றாங்க என்று நான் சொல்லி தான் தெரிய வேண்டுமா? தனிப்பட்ட முறையில் எனக்கும் அவர்களுக்கும் எந்த பிரச்னையும் கிடையாது.. அவர்களுக்கு என் மீது வன்மம் இருக்கலாம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால்.. வந்தால் என்ன.. கண்டிப்பாக வருவோம்.. ஆட்சி அமைக்கும்போது ஒவ்வொருவருக்கும் வீடு நிச்சயம் என்பதே தவெகவின் கனவு. வீட்டில் ஒருவர் டிகிரி முடித்திருக்க வேண்டும். நாங்கள் கொள்கை எதிரி, அரசியல் எதிரி யார் என்று அறிவித்து விட்டு தான் வந்திருக்கிறோம். கரூர் விவகாரம் பத்தி பேசுவோம்னு நினைச்சிருப்பாங்க. அத நான் அப்புறம் பேசுறேன்
இவ்வாறு அவர் கூறினார்.
- 23 Nov 2025 11:30 AM IST
காஞ்சீபுரத்தில் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்கியது
விஜய் காலை 11 மணியளவில் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்றடைந்தார். கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் பங்கேற்கும் பிரசார நிகழ்ச்சி என்பதால், இந்த கூட்டத்தில் விஜய் என்ன பேசப்போகிறார் என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 2 ஆயிரம் பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதற்காக அவர்களுக்கு 'கியூஆர்' கோடுடன் கூடிய நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- 23 Nov 2025 11:23 AM IST
அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 10ஆம் தேதி நடைபெறுகிறது
சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி மண்டபத்தில்காலை 10 மணிக்கு கூட்டம் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
அதில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக-பாஜக மீண்டும் கூட்டணி அமைத்த பின் நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
- 23 Nov 2025 11:07 AM IST
ரசிகர்களுக்காக மிகவும் வருந்துகிறேன்: டிராவிஸ் ஹெட்
ரசிகர்களுக்காக வருந்துகிறேன் என டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது.
ஒரு தொடரை நன்றாக தொடங்குவது எப்போதும் இனிமையானது. சில ஆண்டுக்கு முன்பு பிரிஸ்பேனில் இவ்வாறு ஆடினேன். அது போல் இதுவும் சிறப்பானது. இந்த டெஸ்டில் முதல் நாள் ஆட்டம் எங்களுக்குரியதாக இல்லை. இன்றும் (நேற்று) சில நேரங்களில் கடினமாக இருந்தது. எனவே இரு நாட்களுக்குள் இது போன்ற வெற்றியை பெறுவது மிகப்பெரியது. நாளைய ஆட்டத்துக்காக டிக்கெட் வாங்கிய 66 ஆயிரம் ரசிகர்களுக்காக மிகவும் வருந்துகிறேன். என தெரிவித்தார்
- 23 Nov 2025 11:04 AM IST
டெல்லி கார் வெடிப்பில் அடையாளம் காணப்படாத 3 உடல்கள்... டி.என்.ஏ. சோதனை நடத்த முடிவு
டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 3 உடல் பாகங்கள் இன்னும் ஒப்படைக்கப்படாமல் உள்ளன.
- 23 Nov 2025 11:03 AM IST
’ஜென்டில்மேன் டிரைவர் '...ரேஸிங்கில் விருது வென்ற அஜித்
இத்தாலியின் வெனிஸ் நகரில் நடந்த விருது விழாவில் அஜித் தனது குடும்பத்துடன் பங்கேற்று விருதினை பெற்றுக்கொண்டார்.
















