நாங்கள் ஆட்சிக்கு வந்தால்..  - தவெக தலைவர் விஜய்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-11-2025
x
Daily Thanthi 2025-11-23 06:16:39.0
t-max-icont-min-icon

நாங்கள் ஆட்சிக்கு வந்தால்.. - தவெக தலைவர் விஜய் பேச்சு

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது:-

அண்ணா ஆரம்பித்த கட்சியை அதற்குப் பிறகு கைப்பற்றியவர்கள் என்னவெல்லாம் பண்றாங்க என்று நான் சொல்லி தான் தெரிய வேண்டுமா? தனிப்பட்ட முறையில் எனக்கும் அவர்களுக்கும் எந்த பிரச்னையும் கிடையாது.. அவர்களுக்கு என் மீது வன்மம் இருக்கலாம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால்.. வந்தால் என்ன.. கண்டிப்பாக வருவோம்.. ஆட்சி அமைக்கும்போது ஒவ்வொருவருக்கும் வீடு நிச்சயம் என்பதே தவெகவின் கனவு. வீட்டில் ஒருவர் டிகிரி முடித்திருக்க வேண்டும். நாங்கள் கொள்கை எதிரி, அரசியல் எதிரி யார் என்று அறிவித்து விட்டு தான் வந்திருக்கிறோம். கரூர் விவகாரம் பத்தி பேசுவோம்னு நினைச்சிருப்பாங்க. அத நான் அப்புறம் பேசுறேன்

இவ்வாறு அவர் கூறினார். 

1 More update

Next Story