இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-11-2025

கோப்புப்படம்
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 23 Nov 2025 4:05 PM IST
கொரோனா காலத்தில் உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்குக - ஓ.பன்னீர்செல்வம்
கொரோனா காலத்தில் உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
- 23 Nov 2025 2:47 PM IST
29 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 29 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 23 Nov 2025 1:48 PM IST
தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு “ஆரஞ்ச் அலர்ட்”
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (நவ.23ம் தேதி) மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
- 23 Nov 2025 1:45 PM IST
ஆந்திராவில் சத்திய சாய் பாபா நூற்றாண்டு விழா - துணை ஜனாதிபதி பங்கேற்பு
சத்திய சாய் பாபாவின் பாதையை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் என சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
- 23 Nov 2025 1:44 PM IST
வங்கக்கடலில் உள்ள மீனவர்கள் நாளைக்குள் கரைக்கு திரும்ப வேண்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்ற நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கரைக்கு திரும்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 23 Nov 2025 1:41 PM IST
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு நாளை மறுநாள் முதல் 10 ஆயிரமாக உயர வாய்ப்பு
சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் மிகவும் சிரமம் அடைந்தனர்.
- 23 Nov 2025 1:03 PM IST
2 நாளில் ஆட்டம் முடிந்தது அதிர்ச்சியாக இருக்கிறது....இங்கிலாந்து கேப்டன்
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதலாவது டெஸ்ட் உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா சார்பில் டிராவிஸ் ஹெட் சதமடித்து வெற்றிக்கு வழிவகுத்தார் .முதல் நாளில் விக்கெட்சரிந்த இந்த டெஸ்ட் போட்டி வியக்க வைக்கும் வகையில் 2-வது நாளிலேயே முடிவுக்கு வந்தது.
- 23 Nov 2025 12:59 PM IST
நான் சும்மா எதையும் சொல்ல மாட்டேன்.. ஒன்னு சொன்னா அதை செய்யாம விட மாட்டேன் என்று மக்கள் சந்திப்பில் விஜய் கூறினார்.
- 23 Nov 2025 12:57 PM IST
‘சும்மா எதையும் சொல்ல மாட்டேன், சொன்னால் அதை செய்யாமல் விட மாட்டேன்’ - விஜய்
நான் அரசியலுக்கு வந்தது மக்களுக்கு நல்லது செய்வதற்காக மட்டும்தான் என்று விஜய் தெரிவித்தார்.
















