இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-11-2025

கோப்புப்படம்
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 23 Nov 2025 11:03 AM IST
’ஜென்டில்மேன் டிரைவர் '...ரேஸிங்கில் விருது வென்ற அஜித்
இத்தாலியின் வெனிஸ் நகரில் நடந்த விருது விழாவில் அஜித் தனது குடும்பத்துடன் பங்கேற்று விருதினை பெற்றுக்கொண்டார்.
- 23 Nov 2025 10:47 AM IST
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வாளர்
வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமடைய வாய்ப்புள்ளது. எனவே, தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் இடைவிடாது மழை பெய்யும். எனவே, மத்திய, தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு அனைத்து மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும். சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும்.
கனமழை எச்சரிக்கை: தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, தென்காசி மாவட்டகளில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மிக அதிக மழை பெய்யும் பகுதிகள்: நெல்லை மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை மலைப்பகுதிகளில் மிக அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 23 Nov 2025 10:35 AM IST
சேலத்தில் 56 அடி உயர ராஜ முருகன் சிலை பிரதிஷ்டை
சிலை பிரதிஷ்டை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்து வழிபட்டனர்.
- 23 Nov 2025 10:06 AM IST
டெல்லியில் காற்று மாசு எதிரொலி: 50 சதவீத ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அரசு உத்தரவு
5-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஆன்லைனில் கல்வி கற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- 23 Nov 2025 10:04 AM IST
’பீஸ்ட்’ மோடில் சமந்தா...வைரலாகும் புகைப்படங்கள்
நடிகை சமந்தா தற்போது 'மா இன்டி பங்காரம்' படத்தில் பிஸியாக உள்ளார். அவரே இப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார்.
- 23 Nov 2025 10:01 AM IST
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 10 மசோதாக்கள் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 10 மசோதாக்கள் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
- 23 Nov 2025 9:59 AM IST
சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு
புகுஷிமா அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்குவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
- 23 Nov 2025 9:57 AM IST
திருச்செந்தூர் கோவிலில் வாலிபர்கள் அத்துமீறல்: குத்தாட்டம் போட்டு ‘ரீல்ஸ்’ வெளியிட்டனர்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் 6 பேர் கொண்ட வாலிபர்கள் குழுவினர் சமீபத்தில் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்கள் கோவில் வளாகத்தில் வைத்து அத்துமீறி பட்டப்பகலில் சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்டு இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர்.
- 23 Nov 2025 9:55 AM IST
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகும் புயல் சின்னம்
தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
- 23 Nov 2025 9:54 AM IST
சிறப்பு தகுதித்தேர்வில் பணி காலத்திற்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
















