இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-11-2025

கோப்புப்படம்
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 23 Nov 2025 9:54 AM IST
சிறப்பு தகுதித்தேர்வில் பணி காலத்திற்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
- 23 Nov 2025 9:53 AM IST
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: சுப்மன் கில் விலகல்
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் 2-வது நாளில் கழுத்து பிடிப்பு காயத்தால் வெளியேறிய இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
- 23 Nov 2025 9:51 AM IST
கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த தமிழறிஞர் ஈரோடு தமிழன்பன் உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று மரணம் அடைந்தார்.
- 23 Nov 2025 9:49 AM IST
குடும்பத்தகராறில் விபரீதம்.. 2 மகள்களை கொன்று எலக்ட்ரீசியன் தற்கொலை
மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் எலக்ட்ரீசியன் அந்த விபரீத முடிவை எடுத்தார்.
- 23 Nov 2025 9:47 AM IST
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா - நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்
காலை 6 மணியில் இருந்து 7.15 மணிக்குள் சாமி சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
- 23 Nov 2025 9:46 AM IST
காஞ்சீபுரத்தில் மக்கள் சந்திப்பு: நீலாங்கரை இல்லத்தில் இருந்து புறப்பட்டார் விஜய்
சுமார் 55 நாட்களுக்கு பிறகு பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் விஜய் இன்று பங்கேற்கிறார்.
- 23 Nov 2025 9:43 AM IST
தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, அரியலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
- 23 Nov 2025 9:41 AM IST
இன்றைய ராசிபலன் (23.11.2025): திடீர் யோகம், பணவரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்..!
மேஷம்
பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வி.ஐ.பிகளுக்கு நெருக்கமாவீர்கள். குடும்பத்தில் நல்லது நடக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும்.
அதிர்ஷ்ட நிறம்: கரும் பச்சை














