
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வாளர்
வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமடைய வாய்ப்புள்ளது. எனவே, தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் இடைவிடாது மழை பெய்யும். எனவே, மத்திய, தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு அனைத்து மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும். சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும்.
கனமழை எச்சரிக்கை: தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, தென்காசி மாவட்டகளில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மிக அதிக மழை பெய்யும் பகுதிகள்: நெல்லை மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை மலைப்பகுதிகளில் மிக அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






