இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-11-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 16 Nov 2025 11:10 AM IST
ராஷ்மிகா மந்தனா தேசிய விருதுக்கு தகுதியானவர் - தேவி ஸ்ரீ பிரசாத்
சமீப நாட்களில் நான் மனம் திறந்து கைதட்டி ரசித்த படம் 'தி கேர்ள் பிரண்ட்' தான் என தேவி ஸ்ரீ பிரசாத் தெரிவித்தார்.
- 16 Nov 2025 10:23 AM IST
பீகாரில் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம்
பீகாரில் செப். மாதம் வெளியான வாக்காளர் பட்டியலில் 7.42 கோடியாக இருந்த வாக்காளர் எண்ணிக்கை, தேர்தலுக்கு பிறகு 7.45 கோடியாக மாறியது எப்படி? என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி இருந்தது.
இந்நிலையில் தேர்தல் விதிமுறைகளின் படி வேட்புமனு தாக்கலுக்கு 10 நாட்களுக்கு முன்பு வரை புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க முடியும் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
- 16 Nov 2025 10:14 AM IST
7 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 16 Nov 2025 9:56 AM IST
உத்தரபிரதேசத்தில் கல்குவாரியில் பாறைகள் சரிவு - 15 பேரின் நிலை என்ன?
உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ராவில் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. குவாரி உள்ளேயும், பெரிய பள்ளம் தோண்டப்பட்டு கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பாறைகள் சரிந்து விழுந்தது. இதில் 16 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு பணி ஈடுபட்டனர்.
- 16 Nov 2025 9:48 AM IST
சென்னை அணியில் இருந்து விலக விரும்பிய ஜடேஜா....வெளியான பரபரப்பு தகவல்
ஜடேஜா மற்றும் சாம் கரனை ராஜஸ்தானுக்கு கொடுத்து விட்டு சஞ்சு சாம்சனை சென்னை அணி வாங்கியுள்ளது.
- 16 Nov 2025 9:46 AM IST
இயக்குநர் சுந்தர்.சி விலகியது ஒரு விபத்தல்ல; திருப்பம் - வைரமுத்து
இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
- 16 Nov 2025 9:44 AM IST
அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக சபரிமலைக்கு வரும் பக்தர்கள் நீர்நிலைகளில் நீராட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
- 16 Nov 2025 9:43 AM IST
மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு
மண்டல பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்பட்டு, நாளை (திங்கள் கிழமை) முதல் பக்தர்கள் வழிபட அனுமதி அளிக்கப்படுகிறது.
- 16 Nov 2025 9:41 AM IST
பீகார் தேர்தல் முடிவுகள்: 100-க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் கிடைத்த வெற்றிகள்
பீகார் சட்டசபை தேர்தலில் மேலும் சில தொகுதிகளில் 250-க்கும் குறைவான வாக்குகளால் வெற்றி தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
- 16 Nov 2025 9:40 AM IST
பீகார் தேர்தலில் போட்டியிட்ட 25 மந்திரிகள் வெற்றி - ஒருவர் தோல்வி
ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த 8 மந்திரிகளும் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர்.



















