இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-11-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 16 Nov 2025 12:20 PM IST
எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் தவெகவினர் ஆர்ப்பாட்டம்
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த குளறுபடிகளை நீக்கக்கோரி தவெக சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- 16 Nov 2025 12:09 PM IST
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று நல்லாட்சி அமைக்கும் - செல்வப்பெருந்தகை
2026 தேர்தலில் தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று நல்லாட்சி அமைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
- 16 Nov 2025 12:07 PM IST
டேரில் மிட்சேல் சதம்...வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 270 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில், 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு நியூசிலாந்து அணி 269 ரன்கள் எடுத்தது.
- 16 Nov 2025 12:06 PM IST
உலக வங்கியின் ரூ.14,000 கோடி கடன் பீகார் தேர்தலுக்காக செலவிடப்பட்டது: பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு
தேசிய ஜனநாயக கூட்டணி, மெகா கூட்டணி ஆகியவை கிளப்பிய சூறாவளிகளால் பிரசாந்த் கிஷோர் தூக்கி வீசப்பட்டார்.
- 16 Nov 2025 11:35 AM IST
தேசிய பத்திரிகை தினம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
பத்திரிகைகள் ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் சக்தியாக இருக்க வேண்டும் என்று முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
- 16 Nov 2025 11:34 AM IST
முதலீடுகளைக் கோட்டை விடும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் - நயினார் நாகேந்திரன்
20,000 நேரடி வேலைவாய்ப்புகள் இன்று பறிபோயுள்ளது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
- 16 Nov 2025 11:16 AM IST
கொல்கத்தா டெஸ்ட்: இந்திய அணிக்கு 124 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா
இன்று 3வது நாள் ஆட்டம் நடைபெற்றது. பவுமா . கார்பின் போஷ் இருவரும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர் நிலைத்து ஆடிய போஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடி பந்துகளை பவுண்டரிக்கு பறக்க விட்ட பவுமா அரைசதமடித்து அசத்தினார். மறுபுறம் ஹர்மர் 7 ரன்களும், மஹாராஜா ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதனால் 153 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா அணி ஆட்டமிழந்தது. பவுமா 55 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதனால் இந்திய அணிக்கு 124 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி சார்பில் ஜடேஜா 4 விக்கெட், குல்தீப் யாதவ், சிராஜ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்
- 16 Nov 2025 11:14 AM IST
தமிழ்நாட்டிற்கு இன்றும், நாளையும் ஆரஞ்சு அலர்ட் விடுப்பு
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதன் காரணமாக தமிழ்நாட்டில் மிக கனமழைப் பெய்ய வாய்ப்புள்ளதால் இன்றும், நாளையும் ஆரஞ்சு அலர்ட் விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்.
- 16 Nov 2025 11:13 AM IST
தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளை உணவு
காலை மற்றும் மாலையில் இட்லி வடை சாம்பார் , பொங்கல் சாம்பார் , கிச்சடி சாம்பார் எனவும், மதியம் கலவை சாதம் மற்றும் காய்கறி வகைகளும் விநியோகிக்கப்பட உள்ளது.
- 16 Nov 2025 11:11 AM IST
கொல்கத்தா டெஸ்ட்; சுப்மன் கில் விலகல்
கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுப்மன் கில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



















