இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-11-2025


தினத்தந்தி 16 Nov 2025 9:16 AM IST (Updated: 16 Nov 2025 9:13 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 16 Nov 2025 8:02 PM IST

    காரைக்கால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் - புதுச்சேரி அரசு அறிவிப்பு

    புதுச்சேரி அரசின் மீன்வளத்துறை சார்பில் காரைக்கால் மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வானிலை எச்சரிக்கை தொடர்பான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

    “சென்னை மண்டல வானிலை ஆய்வு நிலையத்தின் 16-11-2025 நாளிட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கு தென்மேற்கே வங்ககடலில் குறைந்த காற்றழுத்த பகுதியானது நேற்றய தினம் மாலை 5:30 மணியில் இருந்து நிலவி வருகிறது. அதனுடன் தொடர்புடைய மேல் வளிமண்டல சுழற்சி கடல் மட்டத்திலிருந்து 5.8 கி.மீ. உயரம் வரை தென்மேற்கு திசை நோக்கி சாய்ந்த நிலையில் பரவியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இது மெதுவாக மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளது.

  • 16 Nov 2025 7:42 PM IST

    மதுரையில் போட்டியா? - பிரேமலதா விஜயகாந்த் பதில்

    ரத யாத்திரை மற்றும் எங்களுடைய கட்சி வளர்ச்சி ஆகியவற்றை பற்றி மட்டுமே கவனம் செலுத்துகிறோம். தமிழ்நாட்டில் உள்ள எல்லா கட்சிகளும் எங்களுக்கு தோழமை கட்சிகள்தான். யாரும் தோழமை இல்லை எனச் சொல்ல முடியாது.

    தே.மு.தி.க. அதிகாரப்பூர்வமாக யாருடனும் கூட்டணி பற்றி பேசவில்லை. மாநாடு நடைபெறும்போது கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை வரும். அப்போது உறுதி செய்யப்படும். தே.மு.தி.க. சார்பில் உள்ளம் தேடி, இல்லம் நாடி மூன்றாம் கட்ட சுற்றுப்பயணத்தை மதுரையிலிருந்து தொடங்குகிறோம். வருகிற டிசம்பர் 2-ந்தேதி ஈரோட்டில் நிறைவு பெறும்.” என்றார்.

  • 16 Nov 2025 7:37 PM IST

    ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டியில் சினெர் - அல்காரஸ் பலப்பரீட்சை

    முன்னணி 8 வீரர்கள் இடையிலான ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது.

    இதில் ஜானிக் சினெர் (இத்தாலி) - அல்காரஸ் (ஸ்பெயின்) பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

  • 16 Nov 2025 7:21 PM IST

    அழகான தங்கத்திற்கு பின்னால்... ஒளிந்திருக்கும் மனித குலத்திற்கான ஆபத்து; அதிர்ச்சி தகவல் வெளியீடு

    சுரங்க நடவடிக்கைகளால், தூசு பரவல் மற்றும் காற்று சார்ந்த மாசுபாடு ஏற்பட்டு, அருகேயுள்ள சமூக மக்களின் சுகாதாரம் மற்றும் வனவாழ் உயிரினங்களும் பாதிப்பை எதிர்கொள்கின்றன. தங்க சுரங்கங்களில் வெடிப்பு நிகழ்த்தப்படும்போது, விலங்குகள் அச்சத்தில் ஓடி விடுகின்றன.

    சுரங்கங்களில் இருந்து தங்கம் பிரித்தெடுக்கும்போது வெளியிடப்படும் பாதரசம், உணவு சங்கிலியில் சேர்கிறது. இது சுரங்க தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்புவாசிகளை வெகுவாக பாதிக்கிறது. பாதரச வாயுக்கள், நரம்பு மற்றும் நரம்பு செல்கள் மற்றும் சுவாச பாதிப்புகளை ஏற்படுத்தும் திறன் பெற்றது.

  • 16 Nov 2025 7:00 PM IST

    போர் கைதிகள் பரிமாற்ற பணியில் உக்ரைன்... அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்

    போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால், ரஷியாவோ போரை நிறுத்தும் முடிவுக்கு வரவில்லை. அதற்கான பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை.

    இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, ரஷியாவுடன் கைதிகள் பரிமாற்றத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன. போர் கைதிகளை திரும்ப பெறுவதற்கான பல கூட்டங்கள், பேச்சுவார்த்தைகள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளும் முயற்சிகள் நடந்து வருகின்றன என்றார்.

    இதனை உறுதிப்படுத்தும் வகையில், துருக்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்தியஸ்த பேச்சுவார்த்தையின் உதவியுடன் ஆலோசனைகள் நடந்து வருகின்றன என உக்ரைனின் தேச பாதுகாப்பு மற்றும் ராணுவ கவுன்சிலின் செயலாளர் ரஸ்டெம் உமரோவ் கூறியுள்ளார்.

  • 16 Nov 2025 5:08 PM IST

    சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. பேருந்து முன் பூஜை செய்து, பூசணிக்காய் உடைத்து சரண முழக்கத்துடன் பக்தர்கள் சபரிமலை புறப்பட்டனர்.

  • சில நேரங்களில் மோசமாக பந்துவீசினாலும் விக்கெட் விழுந்துவிடுகிறது -சைமன் ஹார்மர்
    16 Nov 2025 5:04 PM IST

    சில நேரங்களில் மோசமாக பந்துவீசினாலும் விக்கெட் விழுந்துவிடுகிறது -சைமன் ஹார்மர்

    ஜடேஜா, பண்ட், ஜுரெல் விக்கெட்டுகள் எனக்கு கிடைத்தது அதிர்ஷ்டம்தான். அவை அவ்வளவு சிறப்பான பந்துகளும் இல்லை. சில நேரங்களில் மோசமாக பந்துவீசினாலும் விக்கெட் விழுந்துவிடுகிறது என கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் 2வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் வீழ்த்திய தென்னாப்பிரிக்க வீரர் ஹார்மர் கூறியுள்ளார்.

  • 13 மாவட்டங்களுக்கு அலர்ட்
    16 Nov 2025 5:00 PM IST

    13 மாவட்டங்களுக்கு அலர்ட்

    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • பிரதமர் வருகை - விமான நிலையத்தில் கட்டுப்பாடு
    16 Nov 2025 3:58 PM IST

    பிரதமர் வருகை - விமான நிலையத்தில் கட்டுப்பாடு

    கோவை, கொடிசியாவில் 19ம் தேதி நடைபெற உள்ள விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதால் கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    18ம் தேதி காலை 6 முதல் 19ம் தேதி மாலை 6 மணி வரை, டெர்மினல் முன்பகுதி மற்றும் Y - ஜங்ஷன் பகுதிகளில் வாகன நிறுத்தத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணத்திற்காக விமான நிலையத்தில் வாகனங்கள் நிறுத்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • கேரளாவில் ஐயப்ப பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதித்த சுகாதாரத்துறை
    16 Nov 2025 3:56 PM IST

    கேரளாவில் ஐயப்ப பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதித்த சுகாதாரத்துறை

    கேரளாவில் மூளையை திண்ணும் அமீபா காய்ச்சல் பரவி வரும் நிலையில், பம்பையில் நீராடும் பக்தர்கள் மூக்கை இரு விரல்களால் அடைத்தபடி நீராட சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. நீரில் பூச்சிகள் இருந்தால் அவை மூக்கிற்குள் நுழைந்து விடுவதை தடுக்கும் வகையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story