இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-11-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 16 Nov 2025 9:35 AM IST
அது மட்டுமே மாறி இருக்கிறது; வேறு எதுவும் மாறவில்லை: கமல்ஹாசன்
தமிழகம் கவனமாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும் என்று கமல்ஹாசன் கூறினார்.
- 16 Nov 2025 9:33 AM IST
திருப்பூர்: பக்தர்கள் சென்ற பஸ் லாரி மீது மோதி விபத்து - 10 பேர் காயம்
எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த சொகுசு பஸ் அதே சாலையில் முன் சென்றுகொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி அப்பளம் போல் நொறுங்கியது.
- 16 Nov 2025 9:31 AM IST
அதி கனமழைக்கு வாய்ப்பு: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் - புதுச்சேரி மீன்வளத்துறை எச்சரிக்கை
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பலத்த காற்றுடன் கன மழை பெய்யும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- 16 Nov 2025 9:29 AM IST
பீகார் தேர்தல் வெற்றி தமிழகத்தில் எதிரொலிக்காது: அமைச்சர் கே.என்.நேரு
குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
- 16 Nov 2025 9:25 AM IST
வாக்காளர் திருத்தப்பணியில் தலையீடு: திமுகவை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி
திமுக நிர்வாகிகள் வாக்காளர் திருத்தப் பணிகளில் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
- 16 Nov 2025 9:24 AM IST
சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் தவெகவினர் இன்று ஆர்ப்பாட்டம்
சென்னையில் சிவானந்தா சாலையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் பங்கேற்று பேசுகிறார்.
- 16 Nov 2025 9:19 AM IST
தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி வடகிழக்கு பருவமழையை தீவிரப்படுத்தியுள்ளது.
- 16 Nov 2025 9:17 AM IST
ராசிபலன் (16.11.2025): காதலர்களுக்கு மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள்..!
விருச்சிகம்
எதிர்பாராத செலவு உண்டாகும். தம்பதிகளிடையே சண்டை வராமல் தடுக்க வாய் வார்த்தைகளை குறைப்பது நல்லது. கலைஞர்களின் கனவு நனவாகும். வெளி நபர்களிடம் எச்சரிக்கைத் தேவை. வியாபாரிகள் கடின உழைப்பில் அதிக லாபம் ஈட்டுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

















