இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-01-2026
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 23 Jan 2026 11:04 AM IST
அமெரிக்கா முன்மொழிந்த அமைதி வாரியத்தில் இணைய 19 நாடுகள் கையெழுத்து
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற 'காசா அமைதி வாரியம்' தொடக்க விழாவில் சவூதி அரேபியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், துருக்கி, எகிப்து, இஸ்ரேல், வியட்நாம் உட்பட 19 நாடுகள் பங்கேற்று உறுப்பினர்களாக இணைந்தன.
இந்நிலையில் இந்தியா, சீனா, ரஷியா, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, கனடா போன்ற நாடுகள் இந்த வாரியத்தில் இணைவதைத் தவிர்த்துள்ளன.
- 23 Jan 2026 10:58 AM IST
விஜய்க்கு கிடைத்த விசில்.. "நான் கொடுத்த ஐடியாதான்..!" - நடிகை கஸ்தூரி
இந்த நிலையில், மோகன் ஜியின் திரௌபதி 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த பாஜக பிரமுகரும், நடிகையுமான கஸ்தூரி, செய்தியாளர்களிடம் பேசுகையில், "விஜய் விசில் சின்னம்தான் கேட்பார் என ஒரு ஆண்டுக்கு முன்னதாகவே பேசினேன்; அது நான் கொடுத்த ஐடியாதான்; தை பிறந்ததும் அவருக்கு சின்னம் பிறந்திருக்கிறது; அடுத்ததாக அவர் சேர வேண்டிய இடத்திற்கு வழி பிறந்திடும்" என்று தெரிவித்துள்ளார்.
- 23 Jan 2026 10:56 AM IST
தமிழ்நாட்டு மக்களின் வினாக்களுக்கு பிரதமர் விடையளிக்க வேண்டும் - மு.வீரபாண்டியன்
மதுராந்தகம் கூட்டத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டுமென மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
- 23 Jan 2026 10:36 AM IST
தனது வாழ்க்கையில் டி20 உலகக் கோப்பையை முதல் முறையாக தவறவிட்டது குறித்து ரோகித் சர்மா மனம் திறந்து பேசியுள்ளார்.
- 23 Jan 2026 10:35 AM IST
இந்திய பேட்மிண்டனை உலக அரங்கிற்கு கொண்டு சென்றீர்கள் - சாய்னாவுக்கு சச்சின் புகழாரம்
பேட்மிண்டனில் இருந்து ஓய்வு பெற்ற சாய்னா நேவாலுக்கு, சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.
- 23 Jan 2026 10:34 AM IST
வங்கதேசத்திற்கு ஆதரவு - டி20 உலகக் கோப்பையில் பங்கேற்குமா பாகிஸ்தான்?
10-வது ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை நடைபெறுகிறது.
- 23 Jan 2026 10:30 AM IST
சர்வதேச செஸ் போட்டி: குகேஷ் முதல் வெற்றி
கருப்பு நிற காய்களுடன் ஆடிய குகேஷ் 51-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
- 23 Jan 2026 10:29 AM IST
2வது டி20 போட்டி: இந்தியா - நியூசிலாந்து இன்று மோதல்
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.
இதையடுத்து, கடந்த 21ம் தேதி இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இந்நிலையில், இந்தியா, நியூசிலாந்து இடையேயான 2வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. மராட்டிய மாநிலம் நாக்பூரில் இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
- 23 Jan 2026 10:27 AM IST
திருவனந்தபுரம்- தாம்பரம் இடையே அம்ரித் பாரத் ரெயில் சேவை: இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
திருவனந்தபுரத்தில் இருந்து நெல்லை வழியாக தாம்பரத்துக்கு மேலும் ஒரு அம்ரித் பாரத் வாராந்திர ரெயில் இயக்கப்படுகிறது.
- 23 Jan 2026 10:26 AM IST
தி.மு.க.வில் இணைந்தது ஏன்..? - அ.ம.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மாணிக்கராஜா விளக்கம்
அ.ம.மு.க. துணைப்பொதுச்செயலாளர் மாணிக்கராஜா, கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக டி.டி.வி. தினகரன் அறிவித்திருந்தார்.


















