இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-01-2026
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 23 Jan 2026 4:35 PM IST
தமிழ்நாடு மாற்றத்திற்கு தயாராகி விட்டது - பிரதமர் மோடி
மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது:-
பாரதா மாதா வாழ்க..என் சகோதர சகோதரிகளே..வணக்கம். 2026-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் என் முதல் பயணமாக ஏரி காத்த ராமர் பூமியான மதுராந்தகம் வந்துள்ளேன்.இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள், நேதாஜியோடு சுதந்திர போராட்டத்தில் பல தமிழர்கள் பங்கேற்றனர்.வீரம், நாட்டுப்பற்று தமிழக மக்களின் நாடி, நரம்புகளில் நிறைந்துள்ளது. தமிழ்நாடு மாற்றத்திற்கு தயாராகி விட்டது என்றார்.
- 23 Jan 2026 4:29 PM IST
‘தமிழக மக்களே தி.மு.க.வை மன்னிக்காதீர்கள்’ - அன்புமணி ஆவேசம்
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
“தி.மு.க.வை மீண்டும் ஆட்சிக்கு வர விடக்கூடாது. 2021-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து, நகைக்கடன் ரத்து, கூட்டுறவுக் கடன் ரத்து என்று எத்தனையோ அறிவிப்புகளை வெளியிட்டார்கள். நேற்று கூட, ரூ.12 லட்சத்து 16 ஆயிரம் கோடி தொழில் முதலீடு வநந்துவிட்டதாக மிகப்பெரிய பொய்யை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
உண்மையில் வந்தது ரூ.1 லட்சம் கோடிதான். தமிழக மக்களே தி.மு.க.வை மன்னிக்காதீர்கள். இளைஞர்களை அழித்துக்கொண்டிருக்கின்ற தி.மு.க.வை அகற்றுங்கள்.”
இவ்வாறு அவர் பேசினார்.
- 23 Jan 2026 4:27 PM IST
‘தமிழகத்தை மீட்டெடுக்க நர்மதையின் மைந்தன் மோடி வந்துள்ளார்’ - நயினார் நாகேந்திரன்
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:-
"தமிழகத்தை மீட்டெடுக்க நர்மதையின் மைந்தன் மோடி வந்துள்ளார். இது பொதுக்கூட்டம் அல்ல, இது ஒரு மாநாடு. மதுராந்தகத்தில் நடக்கும் கூட்டத்தால் சென்னை சட்டமன்றத்தில் இன்று பெரிய பதற்றம். பல செடிகளில் பூத்த மணம் வீசுகின்ற மலர்கள் மாலையாகி இறைவனிடத்தில் சேரும். அதே போல் மணம் வீசும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள் இன்று ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.
இந்த மாநாட்டை வானமே வாழ்த்திக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி சென்னைக்கு வருகை தரும்போது சூரியன் மறைந்து போனது. நிச்சயமாக ஆட்சி மாற்றம் ஏற்படப்போவது உறுதி. அதற்கான வேலைகளை பிரதமர் மோடியும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் செய்து கொண்டிருக்கிறார்கள்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- 23 Jan 2026 4:22 PM IST
மோடி கால் வைத்ததும் சூரியன் மறைந்துவிட்டது - எடப்பாடி பழனிசாமி
பிரதமர் மோடி இந்த மண்ணில் காலடி வைத்ததும் சூரியன் மறைந்துவிட்டது. சூரியன் மறைந்து குளிர்ச்சி நிலவுவதே சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு சான்று. மதுராந்தகத்தில் அக்டல்போல் திரண்டுள்ள மக்கள் கூட்டமே வெற்றிக்கு சாட்சி. இந்தியாவே மதுராந்தகத்தை உற்று நோக்கி கொண்டிருக்கிறது. ஒரு குடும்பம் வாழ 8 கோடி பேரை துன்புறுத்தலாமா? ஸ்டாலின் குடும்பம் உலக அளவில் பணக்கார குடும்பமாக உள்ளது. திமுகவின் நான்கே முக்கால் ஆண்டு ஆட்சியில் மக்களுக்கு கொடுத்தது துன்பம் மட்டுமே.குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல் வர உள்ளது. 2026 தேர்தல் தான் திமுகவிற்கு இறுதி தேர்தல். இனி திமுக எந்த காலத்திலும் ஆட்சிக்கு வர முடியாது என மதுராந்தகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
- 23 Jan 2026 4:04 PM IST
அண்ணன் எடப்பாடி பழனிசாமியை முழுமனதோடு ஏற்றுள்ளோம் - டிடிவி தினகரன்
அண்ணன் எடப்பாடி பழனிசாமியை முழுமனதோடு ஏற்றுள்ளோம். நானும் எடப்பாடி பழனிசாமியும் ஜெயலலிதாவின் தொண்டர்கள். முழு மனதோடு என்.டி.ஏ கூட்டணியில் இணைந்துள்ளோம். தமிழ்நாட்டில் மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர அமமுக கூட்டணியில் இணைந்துள்ளது. பொதுக்கூட்ட மேடையில் எடப்பாடி பழனிசாமி பெயரை டிவிவி தினகரன் உச்சரித்ததும் தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.
- 23 Jan 2026 3:55 PM IST
பிரதமர் மோடிக்கு சால்வை அணிவித்து எடப்பாடி பழனிசாமி வரவேற்பு
பிரதமர் மோடிக்கு பொன்னாடையும், ஏலக்காய் மாலையையும் எடப்பாடி பழனிசாமி அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- 23 Jan 2026 3:50 PM IST
பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் தொடங்கியது. தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் மோடி, இபிஎஸ், அன்புமணி, அண்னாமலை, டிடிவி தினகரன். மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுகூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.
- 23 Jan 2026 3:40 PM IST
தினகரனுடன் கைகுலுக்கிய எடப்பாடி பழனிசாமி
மதுராந்தகம் தேஜகூ பொதுக்கூட்ட மேடையில் டிடிவி தினகரனுடன் எடப்பாடி பழனிசாமி கைகுலுக்கினார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரதமர் தலைமையில் தேஜகூ பொதுக்கூட்டம் நடக்கிறது.
- 23 Jan 2026 3:35 PM IST
ஹெலிகாப்டரில் மதுராந்தகம் வந்தடைந்தார் பிரதமர் மோடி
தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி மதுராந்தகம் வந்தடைந்தார். பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, ஹெச்.ராஜா, பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர். மதுராந்தகத்தில் ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, அன்புமணி, டிடிவி தினகரன் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர். என்.டி.ஏ. பொதுக்கூட்டத்தில் அதிமுக, பாஜக, பாமக, அமமுக, உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். மதுராந்தகம் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
- 23 Jan 2026 3:20 PM IST
பிரதமர் மோடியை மதுராந்தகம் ஹெலிபேடில் வரவேற்க உள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
















