இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-01-2026


LIVE
தினத்தந்தி 23 Jan 2026 10:13 AM IST (Updated: 23 Jan 2026 6:51 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 23 Jan 2026 3:20 PM IST

    பிரதமர் மோடியை மதுராந்தகம் ஹெலிபேடில் வரவேற்க உள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

  • அதானி குழுமத்திற்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு
    23 Jan 2026 3:16 PM IST

    அதானி குழுமத்திற்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு

    பங்கு சந்தையில் அதானி குழுமத்தின் பங்கு மதிப்புகள் 10 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது. அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு சரிவால் இன்று ஒரே நாளில் ஏறத்தாழ ரூ.1 லட்சம் கோடி வரை இழப்பு என தகவல் வெளியாகி உள்ளது. அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள எல்.ஐ.சிக்கு ரூ.12,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதானிக்கு சம்மன் அனுப்ப அனுமதி கேட்டு அமெரிக்க பங்குச்சந்தை ஆணையம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அமெரிக்க ஒழுங்குமுறை ஆணையம் நீதிமன்றத்தை நாடியதை அடுத்து அதானி குழும பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.

  • மதுராந்தகம் புறப்பட்டார் பிரதமர் மோடி
    23 Jan 2026 3:11 PM IST

    மதுராந்தகம் புறப்பட்டார் பிரதமர் மோடி

    தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் மதுராந்தகம் புறப்பட்டார் பிரதமர் மோடி. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரதமர் தலைமையில் தேஜகூ பொதுக்கூட்டம் நடக்கிறது.

  • 23 Jan 2026 2:56 PM IST

    சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி

    பிரதமர் மோடி 2.15 மணிக்கு சென்னைக்கு வருவார் என திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அவரது வருகையில் சிறிது தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், 2.40 மணியளவில் பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தார்.

    விமான நிலையத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி, தலைமைச் செயலாளர் முருகானந்தம், டி.ஜி.பி. வெங்கட்ராமன், அமைச்சர் தா.மோ.அன்பரசன், பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. தலைவர்கள் ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்றனர். அவரது வரவேற்பை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு மதுராந்தகம் வர உள்ளார். 

  • மேடையில் மாம்பழம் சின்னம்: அன்புமணி விளக்கம்
    23 Jan 2026 2:26 PM IST

    மேடையில் மாம்பழம் சின்னம்: அன்புமணி விளக்கம்

    மாம்பழம் சின்னத்தை நாங்கள் பயன்படுத்த தேர்தல் ஆணையம் எங்களுக்கு அதிகாரம் தந்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி மேடையில் மாம்பழம் சின்னம் இருந்ததற்கு ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அன்புமணி விளக்கம் அளித்துள்ளார். மதுராந்தகம் பொதுக்கூட்டம் திமுகவிற்கு பயத்தை ஏற்படுத்தி உள்ளது. வரும் தேர்தலில் திமுக வேண்டாம் என்பதில் தமிழக மக்கள் உறுதியாக உள்ளதாக அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

  • பிரதமர் மோடியின் சென்னை வருகை தாமதம்
    23 Jan 2026 2:21 PM IST

    பிரதமர் மோடியின் சென்னை வருகை தாமதம்

    மதுராந்தகத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க வரும் பிரதமர் மோடியின் பயணம் தாமதமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை விமானம் மூலம் 2.15 மணிக்கு பிரதமர் மோடி சென்னைக்கு வர விருந்தநிலையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மதியம் 2.15க்கு பதிலாக 2.41க்கு மணியளவில் பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வரவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

  • 23 Jan 2026 1:49 PM IST

    சென்னை உட்பட 7 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் நாளை (சனிக் கிழமை) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

  • 23 Jan 2026 1:27 PM IST

    6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய 6 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று (வெள்ளிக் கிழமை) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

  • 23 Jan 2026 1:18 PM IST

    ஜல்லிக்கட்டு போட்டி: ஆன்லைன் பதிவு முறையில் மாற்றம்


    உள்ளூர் காளைகளும், வீரர்களும் பங்குபெறுவதை உறுதி செய்திட ஆன்லைன் பதிவு முறை மாற்றம் செய்யப்பட உள்ளது. மேலும் மாவட்ட அளவில் முடிவு செய்துகொள்ள வழிவகை செய்யப்படும் என்றும், மாடுபிடி வீரர்களுக்கு ஆயுள் காப்பீடு கட்டாயம் என்ற விதி தளர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போட்டியின் போது இறக்க நேரிடும் மாடுபிடி வீரர்களுக்கு உரிய நிவாரணத்தை அரசு வழங்குகிறது என்றும், ஜல்லிக்கட்டு போட்டி நடத்துபவர்களிடம் முத்திரைத் தாளில் உறுதிமொழி என்ற நடைமுறை ரத்து செய்யப்படுவதாகவும், ஜல்லிக்கட்டை தொடர்ந்து ஊக்குவித்திட முதல்-அமைச்சர் வழிகாட்டுதலில் செயல்படுவோம் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

  • 23 Jan 2026 1:08 PM IST

    ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன..? 


    மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story