இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-01-2026
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 23 Jan 2026 1:06 PM IST
தை முடிவதற்குள் உரிய பதில் - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
- 23 Jan 2026 12:30 PM IST
அம்ரித் பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
தென்னக ரெயில்வேயில் திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை வழியாக தாம்பரத்துக்கு புதிய வாராந்திர அம்ரித் பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. வந்தே பாரத் போன்று நவீன வசதிகளை கொண்ட, அதே நேரத்தில் ஏ.சி. வசதி இல்லாத ‘அம்ரித் பாரத்’ ரெயில் உருவாக்கப்பட்டு உள்ளது. நாகர்கோவிலில் இருந்து நெல்லை, மதுரை, பழனி, கோவை, சேலம் வழியாக மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் சுற்றுலா தலம் அருகே உள்ள நியு ஜல்பைகுரி நகருக்கு ஒரு அம்ரித் பாரத் ரெயில் கடந்த வாரம் போக்குவரத்தை தொடங்கி உள்ளது.
இந்த சூழலில் திருவனந்தபுரம் சென்டிரலில் இருந்து நெல்லை வழியாக தாம்பரத்துக்கு மேலும் ஒரு அம்ரித் பாரத் வாராந்திர ரெயில் (வண்டி எண் 16121 / 16122) இயக்கப்படுகிறது.
இந்நிலையில் திருவனந்தபுரம் சென்டிரல் ரெயில் நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி திருவனந்தபுரம்- தாம்பரம் அம்ரித் பாரத் அறிமுக ரெயில் உள்ளிட்ட ரெயில்களின் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.
இந்த ரெயில் குழித்துறை, நாகர்கோவில் டவுன், வள்ளியூர் வழியாக நெல்லை சந்திப்புக்கு மதியம் 1.20 மணிக்கு வந்து 1.25 மணிக்கு புறப்படுகிறது. தொடர்ந்து கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்துக்கு இரவு 11.45 மணிக்கு வந்தடைகிறது.
- 23 Jan 2026 11:47 AM IST
திருவண்ணாமலையில் விமான நிலையம் அமையுமா..? - அமைச்சர் சிவசங்கர் பதில்
கீழ்பென்னாத்தூர் தொகுதியில் ஒரு போக்குவரத்து பணிமனை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
- 23 Jan 2026 11:38 AM IST
திருப்பரங்குன்றம் வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலை தொல்லியல் துறையிடம் ஆய்வுக்கு ஒப்படைக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக இந்து தர்ம பரிஷத் பெயரில் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பான அந்த மனுவில், திருப்பரங்குன்றம் கோவிலிலிருந்து இந்து சமய அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என்றும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நிரந்தரமாக தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
- 23 Jan 2026 11:31 AM IST
ஜம்மு காஷ்மீரில் வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம்
ஜம்மு காஷ்மீரில் வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- 23 Jan 2026 11:30 AM IST
டி20 உலகக் கோப்பை - நியூசிலாந்து அணியில் இருந்து ஆடம் மில்னே விலகல்...மாற்று வீரர் இவரா?
டி20 உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த ஆடம் மில்னே தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் விலகி இருக்கிறார்.
- 23 Jan 2026 11:28 AM IST
பாஜக கூட்டணிக்கு தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும் - பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி
தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் அடுக்கடுக்கான கேள்விகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்துள்ளார்.
- 23 Jan 2026 11:14 AM IST
நாளை ம.நீ.ம. செயற்குழு கூட்டம் - கமல்ஹாசன் அறிவிப்பு
மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- 23 Jan 2026 11:12 AM IST
கன்னியாகுமரியில் சுற்றுலா பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் சிவசங்கர்
கன்னியாகுமரியில் சுற்றுலா பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
- 23 Jan 2026 11:08 AM IST
தி.மு.க.வில் இணையும் முன் வைத்திலிங்கம் வைத்த ஒரே கோரிக்கை..!
சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனது நிலைப்பாட்டை இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.


















