இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-01-2026
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 23 Jan 2026 10:24 AM IST
வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை: இன்றைய நிலவரம் என்ன..?
இன்று தங்கம் விலை மீண்டும் உச்சத்தை எட்டி உள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,17,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.450 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,650-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- 23 Jan 2026 10:23 AM IST
திமுக அரசுக்கு விடை கொடுக்க தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது - பிரதமர் மோடி
திமுக அரசுக்கு விடை கொடுக்க தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- 23 Jan 2026 10:20 AM IST
பல்கலைக்கழகங்களில் 50% ஆசிரியர் காலி பணியிடங்கள்: திமுக அரசுக்கு அன்புமணி கண்டனம்
ஆசிரியர்களை நியமிக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது என அன்புமணி தெரிவித்துள்ளார்.
- 23 Jan 2026 10:19 AM IST
குடியரசு தினம், தொடர் விடுமுறை: சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்
வார இறுதி நாட்கள், குடியரசுதினத்தை முன்னிட்டு, அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
- 23 Jan 2026 10:18 AM IST
நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு தைப்பூச திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுவாமி சன்னதியில் உள்ள பிள்ளையார் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, பூஜைகள் நடைபெறுகிறது.
- 23 Jan 2026 10:17 AM IST
நெல்லை வழியாக செல்லும் ரெயில்களுக்கு புதிய நிறுத்தங்கள் அறிவிப்பு
பல்வேறு வழித்தடங்களில் செல்லும் ரெயில்கள், குறிப்பிட்ட சில ஊர்களில் நின்று செல்வதற்கு தெற்கு ரெயில்வே அனுமதி அளித்துள்ளது.
- 23 Jan 2026 10:15 AM IST
பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை: தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்...!
பிரதமர் மோடி இன்று தமிழகம் வர உள்ளார். அவர் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். கேரளாவில் இருந்து மதியம் 1.15 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி மதியம் 2.15 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மதுராந்தகம் செல்கிறார்.
- 23 Jan 2026 10:14 AM IST
இன்றைய ராசிபலன் (23.01.2026): பணவரவால் மனம் மகிழும் நாள்..!
ரிஷபம்
பணவரவால் மனம் மகிழும். எதிர்பார்த்த நற்செய்தி கிடைக்கும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரம் செழிப்புறும். வெளிநாட்டுத் தொடர்பால் நன்மை கூடும். மார்கெட்டிங்துறையில் உள்ளவர்கள் தங்கள் அமைதியான அணுகுமுறையால் அதிக ஆர்டர்களை பெறுவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை காப்பர்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
















