இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-08-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-08-18 08:31 IST

கோப்புப்படம் 


Live Updates
2025-08-18 14:22 GMT

பிரதமர் மோடியுடன் சுபான்ஷு சுக்லா சந்திப்பு

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று திரும்பிய இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார்.

அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு சென்ற அவர் 18 நாட்கள் தங்கியிருந்து ஆய்வு பணிகளில் ஈடுபட்டார். ஆராய்ச்சி பணி நிறைவடைந்ததும், கடந்த மாதம் 15-ந் தேதி பூமிக்கு திரும்பினர். இதனால், 41 ஆண்டுகளில் விண்வெளிக்கு சென்று திரும்பிய முதல் இந்தியர் என்ற பெருமையை சுக்லா பெற்றார்.

2025-08-18 13:33 GMT

அசாமின் நாகோன் பகுதியில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மதியம் 12.09 மணியளவில் ரிக்டர் அளவில் 4.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மாதத்தில் மட்டும் அசாமில் இது 7-வது நிலநடுக்கமாகவும், நாகோனில் மூன்றாவது நிலநடுக்கமாகவும் பதிவாகியுள்ளது.

2025-08-18 13:32 GMT

20-ம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்கிறார் சி.பி. ராதாகிருஷ்ணன்

துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணன், வரும் 20-ம் தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள், தே.ஜ.கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அந்நிகழ்வில் பங்கேற்பார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

2025-08-18 13:30 GMT

4 நாட்களில் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்த “கூலி”

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'கூலி' படம் உலக அளவில் 4 நாட்களில் ரூ.404 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

2025-08-18 13:29 GMT

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர விரைவு ரெயில் (வண்டி எண். 06061) ஆகஸ்ட் 27, செப்டம்பர் 03 மற்றும் 10, 2025 ஆகிய தேதிகளில் (புதன்கிழமைகளில்) இரவு 11.50 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 3.15 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.

மறுமார்க்கத்தில் வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாராந்திர விரைவு ரெயில் (வண்டி எண்: 06062) ஆகஸ்ட் 28, செப்டம்பர் 4 மற்றும் 11, 2025 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமைகளில்) மாலை 6.40 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11.55 மணிக்கு எர்ணாகுளத்திற்கு சென்றடையும்.

2025-08-18 12:24 GMT

சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து எல்.முருகன் வாழ்த்து

டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து மத்திய இணை மந்திரி எல்.முருகன் வாழ்த்து தெரிவித்தார்.

2025-08-18 12:22 GMT

பிரதமர் மோடியுடன் ரஷிய அதிபர் புதின் தொலைபேசியில் பேச்சு

உக்ரைன்-ரஷியா போர் தொடர்பாக அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்தது குறித்து இந்திய பிரதமர் மோடியை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு ரஷிய அதிபர் புதின் உரையாடினார். உக்ரைன் விவகாரத்தில் அமைதியான தீர்வு எட்ட வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருவதாக புதினிடம் பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

2025-08-18 12:09 GMT

அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை தொடரும் - சுப்ரீம் கோர்ட்டு

டாஸ்மாக் நிறுவனம் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்டு இருந்த தடை தொடரும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரியதால், 4 வாரங்களுக்கு வழக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு கூறும் கருத்துக்கள் ஊடகத்தில் மட்டுமல்லாமல், கீழமை நீதிமன்றங்கள் வரை பரவுவதாக அமலாக்கத்துறை தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் “நாங்கள் தனி நபரையோ அல்லது அமைப்பையோ தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதில்லை. மாறாக வழக்கின் தன்மையை பொறுத்தே நாங்கள் கருத்துக்களை கூறுகிறோம்" என தெரிவித்தார்.

2025-08-18 12:05 GMT

தேவநாதன் யாதவின் சொத்து விபரங்களை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

நிதி மோசடி வழக்கில் கைதான தேவநாதன் யாதவின் அனைத்து சொத்து விபரங்களையும் தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 6 வார காலம் இடைக்கால ஜாமின் வழங்குமாறு அவர் தரப்பில் வாதம் முன்வைக்க, அது குறித்து வரும் 25ம் தேதி முடிவு செய்யப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைக்கக் கூடும் என்ற காவல்துறையின் வாதத்தை ஏற்க நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளனர்.

2025-08-18 12:03 GMT

மதுரை ஆதீனத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது: ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை ஆதீனத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கார் விபத்து விவகாரத்தை மத ரீதியாக சித்தரித்த விவகாரத்தில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி ஆதீனம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆதீனத்தின் மனுவுக்கு செப்டம்பர் 15ம் தேதி காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்