அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை தொடரும் - சுப்ரீம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-08-2025
அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை தொடரும் - சுப்ரீம் கோர்ட்டு
டாஸ்மாக் நிறுவனம் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்டு இருந்த தடை தொடரும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரியதால், 4 வாரங்களுக்கு வழக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு கூறும் கருத்துக்கள் ஊடகத்தில் மட்டுமல்லாமல், கீழமை நீதிமன்றங்கள் வரை பரவுவதாக அமலாக்கத்துறை தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் “நாங்கள் தனி நபரையோ அல்லது அமைப்பையோ தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதில்லை. மாறாக வழக்கின் தன்மையை பொறுத்தே நாங்கள் கருத்துக்களை கூறுகிறோம்" என தெரிவித்தார்.
Update: 2025-08-18 12:09 GMT