‘ஆர்.பி.உதயகுமார் என் தம்பி’ ஓ.பன்னீர்செல்வம் சொல்கிறார்
தவெக தரப்பில் இருந்து இதுவரை யாரும் கூட்டணி குறித்து என்னை தொடர்பு கொள்ளவில்லை என்று ஒ.பன்னீர் செல்வம் கூறினார். .;
மதுரை,
சென்னை செல்வதற்காக, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையம் வந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், “சி.பி.ராதாகிருஷ்ணன் அனைத்து மக்களிடமும் அன்பாகவும், பண்பாகவும் பழகக்கூடியவர். அவர் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருப்பதை வரவேற்கிறேன். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், என்னை அண்ணன் என அழைத்தாக கூறுகிறீர்கள். அப்படி என்றால், அவர் எனக்கு தம்பி,” என்று கூறினார்.
இதற்கிடையே, “விஜய்யுடன் கூட்டணி சேர்வீர்களா?” என கேள்வி எழுப்பியதற்கு, “இதுவரை யாரும் கூட்டணி குறித்து என்னை தொடர்பு கொள்ளவில்லை” என்றார்.
பா.ஜனதா கூட்டணியில் இணைவீர்களா? என்றும், பிரதமர் தமிழகம் வரும்போது சந்திக்க ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுவது குறித்தும் கேள்விகள் கேட்டனர். அதற்கு, ஓ.பன்னீர்செல்வம், “பொறுத்திருந்து பாருங்கள்” என கூறிவிட்டு சென்றார்.