சென்னை: 12 வார்டுகளில் நாளை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.;

Update:2025-08-18 21:50 IST

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (19.08.2025) திருவொற்றியூர் மண்டலம், வார்டு-9ல் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள கௌரி ஆசிரமம், மாதவரம் மண்டலம், வார்டு-23ல் மேற்கு காவாங்கரையில் உள்ள ராணி சங்குபதி திருமண மண்டபம், தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-36ல் வியாசர்பாடி, 2வது பிரதான சாலை, சர்மா நகர், இராயபுரம் மண்டலம், வார்டு-52ல் பழைய வண்ணாரப்பேட்டை, மொட்டை தோட்டத்தில் உள்ள ஃபரூக் மஹால், திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-78ல் புரசைவாக்கம், பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள லட்சுமி மஹால், அம்பத்தூர் மண்டலம், வார்டு-81ல் எஸ்.எம்.கே. திருமண மண்டபம், அண்ணாநகர் மண்டலம், வார்டு-104ல் அண்ணாநகர் மேற்கு, என்.வி.என். நகர், ஜவஹர்லால் நேரு 100 அடி சாலையில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பு, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-113ல் தியாகராய நகர், ஹபிபுல்லா சாலையில் உள்ள எஸ்.சி.எஸ். சபா, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-142ல் சைதாப்பேட்டையில் உள்ள ராஜ் திரையரங்கம், வளசரவாக்கம் மண்டலம், வார்டு-147ல் கங்கா நகர், மேட்டுக்குப்பம் சாலையில் உள்ள ஹனு ரெட்டி கார்டன், ஆலந்தூர் மண்டலம், வார்டு-158ல் நந்தம்பாக்கம், மவுண்ட் பூந்தமல்லி, சென்னை வர்த்தக மையம் எதிரிலுள்ள ஐடிபிஎல் நிலம், அடையாறு மண்டலம், வார்டு-174ல் பெசன்ட் நகர், சாஸ்திரி நகர், 5வது குறுக்குத் தெருவில் உள்ள சமுதாயக் கூடம் ஆகிய 12 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்