”நிர்வாண வீடியோவை வெளியிடுவேன்...” பள்ளி மாணவியை மிரட்டிய சிறுவன் கைது
`உன்னையும் உனது தந்தையையும் கொலை செய்து விடுவேன்' எனவும் மிரட்டியதாக கூறப்படுகிறது.;
கோப்புப்படம்
திருச்சி,
திருச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரும், கேட்டரிங் கல்லுரியில் 2-ம் ஆண்டு படித்து வரும் 17 வயது மாணவர் ஒருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த மாணவன் கடந்த ஆண்டு தனது நண்பன் வீட்டிற்கு அந்த சிறுமியை வரவழைத்து சிறுமியின் சம்மதத்துடன் உல்லாசமாக இருந்துள்ளார். மேலும் மாணவியின் ஆடையை கலைந்து தனது செல்போனில் நிர்வாண வீடியோ எடுத்து வைத்து கொண்டதாகவும், அதன் பிறகு இருவரும் காதலை தொடர்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த மாணவியின் வீட்டிற்கு மாணவனுடன் பழகும் விவரம் தெரியவந்தது. இதனால் மாணவி, மாணவனுடன் பேசுவதை நிறுத்தி உள்ளார். இந்த நிலையில் அந்த மாணவன், மாணவியை நேரில் சந்தித்து, `வழக்கம் போல் நீ பேசவில்லை என்றால் உனது நிர்வாண வீடியோவை வெளியிடுவேன்' என்று மிரட்டியதோடு `உன்னையும் உனது தந்தையையும் கொலை செய்து விடுவேன்' என மிரட்டியதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக அந்த மாணவி திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த மாணவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.