இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 27-11-2025


தினத்தந்தி 27 Nov 2025 9:22 AM IST (Updated: 27 Nov 2025 8:06 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 27 Nov 2025 10:45 AM IST

    விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்: தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம் 


    விஜய் முன்னிலையில் 50-க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் த.வெ.க.வில் இணைந்தார் செங்கோட்டையன்.

  • 27 Nov 2025 10:04 AM IST

    தவெக தலைமை அலுவலகத்திற்கு செங்கோட்டையன் வருகை


    இன்று (நவ.27) காலை தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளநிலையில், செங்கோட்டையன் தற்போது பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார்.

    முன்னதாக முன்னாள் எம்பி சத்யபாமா உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் தவெக தலைமை அலுவலகத்திற்கு வந்துள்ளனர். 

  • 27 Nov 2025 9:46 AM IST

    பனையூரில் உள்ள தவெக அலுவலகத்துக்குப் புறப்பட்டார் விஜய்


    முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இந்த சூழலில் விஜய்யை சந்தித்து நேற்று 2 மணி நேரம் ஆலோசித்த அவர், பனையூர் கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெறும் விழாவில் த.வெ.க.வில் இணைகிறார்.

    இந்நிலையில் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு விஜய் புறப்பட்டுள்ளார். முன்னதாக முன்னாள் எம்பி சத்யபாமா உள்ளிட்ட செங்கோட்டையன் ஆதரவாளர்கள் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளனர்.

  • 27 Nov 2025 9:43 AM IST

    செங்கோட்டையன் ஆதரவாளர்கள் தவெக தலைமை அலுவலகம் வருகை

    இன்று(நவ.27) காலை தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளநிலையில், முன்னாள் எம்பி சத்யபாமா உள்ளிட்ட செங்கோட்டையன் ஆதரவாளர்கள் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளனர்.

    நேற்று(நவ.26) தவெக தலைவர் விஜயை சந்தித்து சுமார் இரண்டரை மணிநேரம் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்; செங்கோட்டையனுக்கு தவெகவில் நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • 27 Nov 2025 9:38 AM IST

    குறைந்த தங்கம் விலை....உயர்ந்த வெள்ளி விலை: இன்றைய நிலவரம் என்ன..? 


    இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.30-ம், சவரனுக்கு ரூ.240-ம் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,770-க்கும், ஒரு சவரன் ரூ.94,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது


  • 27 Nov 2025 9:36 AM IST

    இன்றே உருவாகிறது புயல்.. வட தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்பு..! 


    அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாகக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

  • 27 Nov 2025 9:32 AM IST

    ஒசூரில் விமான நிலையம்: ஆலோசகர்களை தேர்ந்தெடுக்க ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு 


    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரமானது தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது. சர்வதேச நிறுவனங்கள் பலவும் கால்தடம் பதித்து வருகின்றன. இதற்கேற்ப ஒசூரின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஒசூரில் பிரம்மாண்ட தொழில் நகரை கட்டமைக்க டாடா குழுமம் முன்வந்து உள்ளது.

  • 27 Nov 2025 9:31 AM IST

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: புள்ளி பட்டியலில் இந்திய அணிக்கு சரிவு 


    4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி, தென்ஆப்பிரிக்கா தொடருக்கு முன்பாக 61.90 சதவீத புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருந்தது. இப்போது இரு டெஸ்டிலும் தோற்றதால் இந்தியா 48.15 சதவீத புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

  • 27 Nov 2025 9:29 AM IST

    கோவை-ஜோலார்பேட்டை இடையே அதிவேக ரெயில் 2-வது கட்ட சோதனை ஓட்டம்: இன்று நடக்கிறது 


    தமிழகத்தின் முக்கிய ரெயில் வழித்தடங்களில் இயக்கப்படும் ரெயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்கான மேம்பாட்டு பணிகளை தென்னக ரெயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

  • 27 Nov 2025 9:27 AM IST

    செங்கோட்டையன் முடிவால் யாருக்கு பின்னடைவு? - டிடிவி தினகரன் பரபரப்பு பதில் 


    திண்டுக்கல்லில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறந்த நிர்வாகி ஆவார். ஜெயலலிதாவுக்கு மிகவும் விசுவாசமாக இருந்தார். எனக்கும், அவருக்கும் 40 ஆண்டு கால நட்பு உள்ளது. மேலும் அவர், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தது யாருக்கு பின்னடைவு என்பது அனைத்து அரசியல் கட்சிகள், தலைவர்களுக்கும் தெரியும்” என்று கூறினார்.

1 More update

Next Story