இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 27-11-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 27 Nov 2025 12:27 PM IST
மக்களின் அன்புக்குரியவனாக, எப்போதும் அவர்களுக்காக களத்தில் நிற்பவனாக திகழ வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- 27 Nov 2025 11:50 AM IST
அண்ணன் செங்கோட்டையனின் அனுபவம்.... வீடியோ வெளியிட்ட விஜய்
செங்கோட்டையனை வரவேற்று விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “செங்கோட்டையன் அனுபவம் தவெகவுக்கு உறுதுணையாக இருக்கும். நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்” என்று தெரிவித்துள்ளார்.
- 27 Nov 2025 11:46 AM IST
தவெகவில் செங்கோட்டையன்.. எடப்பாடி பழனிசாமி ரியாக்ஷன்
அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், கே.ஏ.செங்கோட்டையன் நடிகர் விஜய் தலைமையிலான தவெகவில் இணைந்தார்.
- 27 Nov 2025 11:45 AM IST
தவெகவில் இணைந்த செங்கோட்டையன்: வன்னி அரசு எச்சரிக்கை
தேர்தலுக்குள்ளாகவே எடப்பாடி பழனிச்சாமி கட்சிக்குள்ளேயே தனிமைப்படுத்தப்படுவார் என்று வன்னி அரசு தெரிவித்தார்.
- 27 Nov 2025 11:43 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாத சிறப்பு உற்சவங்கள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் 30-ம் தேதி வைகுண்ட துவார தரிசனம் ஆரம்பம்.
- 27 Nov 2025 11:42 AM IST
பிரபல நடிகையை கரம்பிடித்த கிரிக்கெட் வீரர் அனிருத்தா ஸ்ரீகாந்த்
நடிகை சம்யுக்தா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இதன் பிறகு அவருக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தன. விஜய்யின் வாரிசு, காபி வித் லவ், துக்ளக் தர்பார், மைடியர் பூதம், உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.
- 27 Nov 2025 11:40 AM IST
சமூக நீதியை வென்றெடுப்பதற்கான பயணத்தில் வி.பி.சிங் துணை நிற்பார்: அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டில் சாதிவாரி சர்வேயின் அடிப்படையில் அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க வி.பி.சிங் நினைவு நாளில் உறுதியேற்போம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
- 27 Nov 2025 10:50 AM IST
எடப்பாடி பழனிசாமிக்கு வீரத்தை ஊட்டுவதே திமுகதான்: அமைச்சர் ரகுபதி விமர்சனம்
விவசாயிகள் முதுகில் குத்திய எடப்பாடி பழனிசாமியின் யோக்கியதையை நாடறியும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
- 27 Nov 2025 10:48 AM IST
அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை
திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு துணை முதல்-அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- 27 Nov 2025 10:46 AM IST
நாடு போற்றும் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் புகழ் ஓங்குக: மு.க.ஸ்டாலின்
முன்னாள் இந்தியப் பிரதமர், சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பதவிகளைத் துச்சமாக நினைத்து, சமூக நீதியை உயிர்க்கொள்கையாக மதித்தவர் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


















