இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 27-11-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 27 Nov 2025 9:26 AM IST
காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி. திருநெல்வேலி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 27 Nov 2025 9:24 AM IST
இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்திற்கு செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் வர உள்ளார். அங்கு விஜய்யை சந்தித்து அவர் முறைப்படி த.வெ.க.வில் இணைகிறார். அவரது ஆதரவாளர்களும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 27 Nov 2025 9:23 AM IST
ராசிபலன் (27.11.2025): நல்ல காரியம் ஒன்று எளிதில் முடியும் நாள்..!
கடகம்
இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை











