இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 26-11-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 26 Nov 2025 12:45 PM IST
தி.மு.க.வுக்கு இழுக்க முயற்சியா..?: செங்கோட்டையனுடன் சேகர்பாபு சந்திப்பு
செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் நடிகர் விஜய்யின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.
- 26 Nov 2025 12:43 PM IST
தமிழகத்தில் நவ.29ம் தேதி அதி கன மழைக்கான “ரெட் அலர்ட்”
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களில் நவ.29ம் தேதி அதி கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் புதுச்சேரி, காரைக்காலிலும் அதி கன மழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- 26 Nov 2025 12:40 PM IST
திருப்பதியில் வைகுண்ட துவார தரிசனம்.. டிக்கெட் ஆன்லைன் முன்பதிவு நாளை துவக்கம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் 30-ந்தேதி முதல் ஜனவரி 8-ந்தேதி வரை 10 நாட்கள் வைகுண்ட துவார தரிசனத்திற்கான விரிவான ஏற்பாடுகள் மற்றும் விரிவான வழிகாட்டுதல்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
- 26 Nov 2025 12:37 PM IST
இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை காக்க உறுதியேற்போம்: விஜய்
இந்திய அரசியலமைப்பின் மாண்பையும் அது நமக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளையும் காக்க உறுதியேற்போம் என விஜய் தெரிவித்துள்ளார்.
- 26 Nov 2025 12:13 PM IST
இந்திய வீரர்களை இழிவுபடுத்தி பேசிய தென் ஆப்பிரிக்கா பயிற்சியாளர்....வலுக்கும் கண்டனம்
நேற்று செய்தியளர்களுக்கு பேட்டி அளித்த தென் ஆப்பிரிக்கா பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் இந்திய அணி வீரர்களை இழிவுபடுத்தும் விதமாக பேசியுள்ளார்.
- 26 Nov 2025 11:54 AM IST
எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்
தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தநிலையில், கோபி எம்.எல்.ஏ. பதவியை செங்கோட்டையன் ராஜினாமா செய்தார். இதன்படி தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவிடம் அவர் தனது ராஜினாமா கடித்தை வழங்கினார். இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- 26 Nov 2025 11:26 AM IST
சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் உருவச்சிலையுடன் கூடிய அரங்கத்தை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக ஈரோட்டுக்கு நேற்று இரவு வந்தார். அவர் காலிங்கராயன் இல்லத்தில் ஓய்வு எடுத்தார். இந்நிலையில் இன்று (புதன்கிழமை) காலை புறப்பட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருந்துறைரோடு, ரிங்ரோடு, பூந்துறைரோடு வழியாக அறச்சலூர் அருகே ஜெயராமபுரம் செல்கிறார். அங்கு சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் உருவச்சிலையுடன் கூடிய அரங்கை திறந்து வைத்தார்.
- 26 Nov 2025 10:59 AM IST
புதுச்சேரியில் டிசம்பர் 5-ந் தேதி விஜய் சாலை வலம்: அனுமதி கேட்டு டி.ஜி.பி.யிடம் மனு
புதுச்சேரியில் சாலை வலமாக சென்று மக்கள் சந்திப்பை மேற்கொள்ள தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார்.
- 26 Nov 2025 10:58 AM IST
மதியம் 1 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 26 Nov 2025 10:56 AM IST
ரூ.45 கோடி செலவு...ரூ.60 ஆயிரம் வசூல் - பாக்ஸ் ஆபீஸில் படுதோல்வியடைந்த படம் ; எது தெரியுமா?
பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர், பூமி பட்னேகர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இந்தப் படத்தின் மொத்த பாக்ஸ் ஆபீஸ் வசூல் ரூ.60 ஆயிரம் மட்டுமே. இது அர்ஜுன் கபூரின் வாழ்க்கையில் ஒரு நிரந்தரக் கறையாகவே இருந்து வருகிறது.



















