இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 26-11-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 26 Nov 2025 10:54 AM IST
சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டி இன்று தொடக்கம்
18-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20கிரிக்கெட் போட்டி இன்று முதல் டிசம்பர் 18-ந் தேதி வரை ஐதராபாத். ஆமதாபாத், கொல்கத்தா, லக்னோ, புனே ஆகிய இடங்களில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் அணிகள் 'எலைட்', 'பிளேட்' என இருவகையாக பிரிக்கப்பட்டுள்ளன. 'எலைட்' பிரிவில் களம் காணும் 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன. நடப்பு சாம்பியன் மும்பை அணி 'ஏ' பிரிவிலும், 3 முறை சாம்பியனான தமிழ்நாடு 'டி' பிரிவிலும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'சூப்பர் லீக்' சுற்றுக்கு தகுதி பெறும்.
- 26 Nov 2025 10:31 AM IST
இந்திய அரசியலமைப்பு தினம்: ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை மிக்க நாள் - பிரதமர் மோடி
பின்தங்கிய குடும்பத்திலிருந்து வந்த தன்னைப் போன்ற ஒருவர், அரசாங்கத் தலைவராக பணியாற்ற அரசியலமைப்பின் சக்தி உதவியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- 26 Nov 2025 10:30 AM IST
நிலைமை மோசமாகி வருகிறது...டெல்லி காற்று மாசு குறித்து கிரித்தி சனோன் கவலை
டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு குறித்த கேள்விக்கு கிரித்தி சனோன் பதிலளித்தார்.
- 26 Nov 2025 10:29 AM IST
அரசியலமைப்பு சட்டத்தை காப்போம்: ஆதவ் அர்ஜுனா
அரசியலமைப்பு சட்டத்தை காப்போம் என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
- 26 Nov 2025 10:03 AM IST
மாநிலத்தின் உரிமைகளை பாதுகாக்க அனைத்தையும் செய்வோம்: மு.க.ஸ்டாலின்
ஒவ்வொரு மாநிலத்தின் உரிமைகளையும் பாதுகாக்க தேவையான அனைத்தையும் செய்வோம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
- 26 Nov 2025 10:01 AM IST
வீட்டில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் மீண்டும் வீடு திரும்பிய செங்கோட்டையன்
அ.தி.மு.க. ஒன்றிணைவது சம்பந்தமாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. 2 பேரும் அவ்வப்போது அதுசம்பந்தமாக கருத்துகளை தெரிவித்து வந்தனர். இது அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.
- 26 Nov 2025 10:00 AM IST
டெல்லி கார் வெடிப்பு: சூட்கேசில் வெடிபொருட்களை கொண்டு சென்ற டாக்டர் உமர் - பரபரப்பு தகவல்
டெல்லி கார் வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமையினர் விசாரித்து வருகிறார்கள்.
- 26 Nov 2025 9:30 AM IST
உருவானது “சென்யார் புயல்”
மலாக்கா ஜல சந்தியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்யார் புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சென்யார் புயல் வடக்கு சுமத்ரா பகுதியில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தற்போது சென்யார் புயல் 2,600 கி.மீ தொலைவில் உள்ளதால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 26 Nov 2025 9:29 AM IST
மீண்டும் உச்சத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன..?
தங்கம் விலை மீண்டும் உச்சத்தை நோக்கி பயணிக்க தொடங்கி உள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,800-க்கும், ஒரு சவரன் ரூ.94,400-க்கும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.
- 26 Nov 2025 8:59 AM IST
"பிக்பாஸ் வீடு பெண்களுக்கு பாதுகாப்பானது" - சீரியல் நடிகை பவித்ரா
நடிகை பவித்ரா சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றிய தனது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.



















