இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 26-11-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 26 Nov 2025 9:29 AM IST
மீண்டும் உச்சத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன..?
தங்கம் விலை மீண்டும் உச்சத்தை நோக்கி பயணிக்க தொடங்கி உள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,800-க்கும், ஒரு சவரன் ரூ.94,400-க்கும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.
- 26 Nov 2025 8:59 AM IST
"பிக்பாஸ் வீடு பெண்களுக்கு பாதுகாப்பானது" - சீரியல் நடிகை பவித்ரா
நடிகை பவித்ரா சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றிய தனது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.
- 26 Nov 2025 8:57 AM IST
’அப்படித்தான் எனக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்தது’ - கீர்த்தி ஷெட்டி
கடந்த 2021-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'உப்பெனா' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் கீர்த்தி ஷெட்டி. அடுத்து 'ஷ்யாம் சிங்கா ராய்', 'வாரியர்' படங்களில் நடித்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் 2023-ம் ஆண்டு வெளியான 'கஸ்டடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். நிவின் பாலி நடிப்பில் வெளியான 'ஏஆர்எம்' படம் மூலம் மலையாளத்துக்கு சென்றார்.
- 26 Nov 2025 8:55 AM IST
சென்னையில் உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி
இந்திய ஸ்குவாஷ் ராக்கெட் சம்மேளம் சார்பில், தமிழக அரசு ஆதரவுடன் 5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னையில் அடுத்த மாதம் (டிசம்பர்) 9-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடக்கிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் மற்றும் நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியில் நடைபெறும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் எகிப்து, இந்தியா, ஈரான், ஜப்பான், மலேசியா, தென்கொரியா, ஹாங்காங், சீனா, தென்ஆப்பிரிக்கா, போலந்து, சுவிட்சர்லாந்து, பிரேசில் ஆகிய 12 அணிகள் பங்கேற்கின்றன.
- 26 Nov 2025 8:53 AM IST
டெல்டா, கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் - தமிழக அரசு எச்சரிக்கை
தேசிய பேரிடர் மீட்பு படையின் ஒரு அணி இன்று (புதன்கிழமை) முதல் விழுப்புரம் மாவட்டத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
- 26 Nov 2025 8:52 AM IST
கார்த்திகை தீபத் திருவிழா: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம்
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
- 26 Nov 2025 8:50 AM IST
சபரிமலை கோவிலில் நாளை முதல் பக்தர்களுக்கான அன்னதான உணவில் மாற்றம்
கடந்த 3 நாட்களில் தினசரி 90 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 26 Nov 2025 8:49 AM IST
காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தமிழகத்தில் காலை 10 மணி வரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி, அரியலூர், கோவை. கடலூர், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, ராமநாதபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர். தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 26 Nov 2025 8:47 AM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை: ஈரோடு மாவட்டத்தில் இன்று போக்குவரத்து மாற்றம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- 26 Nov 2025 8:47 AM IST
இன்று உருவாகிறது “சென்யார் புயல்” - தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
மலாக்கா ஜலசந்தி பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மதியத்திற்குள் (சென்யார்) புயலாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



















