இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-01-2026
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 14 Jan 2026 4:18 PM IST
தமிழ்நாட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் கட்ட சரிபார்ப்பு பணி நிறைவு
தமிழ்நாட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் கட்ட சரிபார்ப்பு பணி நிறைவு பெற்றுள்ளது. 1.75 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1.10 லட்சம் கட்டுப்பாட்டு அமைப்புகள், 1.16 லட்சம் விவிபேட் இயந்திரங்களில் முதல் கட்ட சோதனை நடத்தப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் BEL நிறுவன பொறியாளர்கள் இந்தப்பணியை மேற்கொண்டனர்.
- 14 Jan 2026 4:15 PM IST
ஈரானில் உள்ள இந்தியர்கள் வெளியேற உத்தரவு - இந்திய வெளியுறவுத்துறை
ஈரானில் உள்ள இந்தியர்கள் அனைவரும் கிடைக்கும் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தி உடனடியாக வெளியேறுமாறு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. அந்நாட்டில் நடைபெறும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால் இந்தியர்கள் உச்சபட்ச பாதுகாப்பை கடைபிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
- 14 Jan 2026 2:44 PM IST
நாளை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று மற்றும் நாளை மழைக்கு வாய்ப்பு. ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், அதிகாலை நேரத்தில் ஒருசில இடங்களில் பனிமூட்டமும் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 14 Jan 2026 1:57 PM IST
“எல்லார்க்கும் எல்லாம்” என்ற இலக்கை நோக்கி..” - சமத்துவப் பொங்கல் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.
- 14 Jan 2026 1:41 PM IST
உ.பி. மகாமேளா: சங்கமத்தில் 9 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்
புனித நீராடும் பக்தர்களின் எண்ணிக்கை இன்று மாலைக்குள் ஒரு கோடி முதல் 1.5 கோடி வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 14 Jan 2026 1:40 PM IST
மதுரை அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி: ஏற்பாடுகள் தீவிரம்
17-ந் தேதி நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
- 14 Jan 2026 1:37 PM IST
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: இந்தியா பேட்டிங்
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
- 14 Jan 2026 1:36 PM IST
"தனுஷ் 54" படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு
"தனுஷ் 54" படம் பரபரப்பான கதைக்களத்தில், எமோஷனல் திரில்லராக உருவாகியுள்ளது.
- 14 Jan 2026 1:34 PM IST
பராசக்தி படத்தில் எந்த சர்ச்சை காட்சியும் இல்லை: சிவகார்த்திகேயன்
நான் எந்த பிரசாரமும் செய்யவில்லை. அதில் எனக்கு விருப்பமும் இல்லை என்று சிவகார்த்திகேயன் கூறினார்.
- 14 Jan 2026 1:26 PM IST
ஒரே நாடு ஒரே தேர்தல்: தமிழ்நாடு அரசிடம் கருத்து கேட்டு மத்திய அரசு கடிதம்
தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து தமிழ்நாடு உள்பட அனைத்து மாநில அரசுகளின் கருத்துகளை அறிய மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது. முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அறிக்கை சமர்ப்பித்த நிலையில், இந்த கருத்து கேட்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2029-ம் ஆண்டு முதல் மக்களவை மற்றும் மாநில சட்ட சபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.



















