இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-01-2026
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 14 Jan 2026 1:16 PM IST
சங்கிக்குழுவில் பராசக்தி குழு - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சனம்
சங்கிக்குழுவில் பராசக்தி குழு என்று மாணிக்கம் தாகூர் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ்வலைதளத்தில், “சங்கிகுழு பொங்கலில் பராசக்தி குழு.. ஆனா ஜனநாயகன் தடைசெய்யப்பட்டது” என்று பதிவிட்டுள்ளார்.
- 14 Jan 2026 1:14 PM IST
16ம் தேதி புதுச்சேரியில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட உத்தரவு
திருவள்ளுவர் தினத்தை ஒட்டி வரும் 16ம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- 14 Jan 2026 12:49 PM IST
பாகிஸ்தானில் பிறந்த வீரர்களுக்கு இந்தியா விசா மறுப்பு.. டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பதில் சிக்கல்
அமெரிக்க அணிக்காக விளையாடும் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த நான்கு வீரர்களுக்கு இந்தியா விசா வழங்க மறுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன
- 14 Jan 2026 12:48 PM IST
ராமதாஸ் தலைமையில் நடந்த பொங்கல் விழாவை புறக்கணித்த அன்புமணி
அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களுடன் சேர்ந்து பொங்கல் கொண்டாடி வருகின்றனர்.
- 14 Jan 2026 12:46 PM IST
அரசுக்கு எதிரான போராட்டம்... விசாரணையே இன்றி முதல் நபரை இன்று தூக்கில் போடுகிறது ஈரான்
எர்பானுக்கு எதிராக கடவுளுக்கு எதிராக போர் செய்கிறார் என குற்றச்சாட்டு பதிவாகி உள்ளது.
- 14 Jan 2026 12:26 PM IST
இரட்டை தள மின்சார பேருந்து சேவை: எந்தெந்த வழித்தடத்தில் இயக்கப்படுகிறது தெரியுமா..?
பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுற்றுலா இணையதளத்தில் முன்பதிவு செய்து பயணிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- 14 Jan 2026 12:10 PM IST
இருவர் உயிரிழப்புக்கு கிருமி கலந்த குடிநீரே காரணம்: திமுக அரசுக்கு அன்புமணி கண்டனம்
அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றத் தவறிய திமுக அரசுக்கு வளர்ச்சி குறித்து பேச எந்தத் தகுதியும் இல்லை என அன்புமணி தெரிவித்துள்ளார்.
- 14 Jan 2026 12:08 PM IST
பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.15 ஆயிரமாக உயர்வு - அன்பில் மகேஷ்
இடைநிலை, பகுதி நேர ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
- 14 Jan 2026 11:53 AM IST
பொங்கல் பண்டிகை: வீட்டில் பொங்கல் வைக்க நல்ல நேரம்
பொங்கல் தினத்தன்று புதிய பானையில் புது அரிசியிட்டு பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படையலிட்டு வழிபடுவது வழக்கம்.
- 14 Jan 2026 11:51 AM IST
மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட 'பராசக்தி' படக்குழு
டெல்லியில் நடந்த பொங்கல் விழாவில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன் உள்பட பராசக்தி படக்குழுவினரும் பங்கேற்றனர்.



















