இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-01-2026
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 14 Jan 2026 6:02 PM IST
சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் உள்ள கடையில் தீ விபத்து
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தின், 3 மற்றும் 4வது நடைமேடை இடையே உள்ள கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- 14 Jan 2026 5:57 PM IST
தற்கொலைக்கு முயன்ற பகுதி நேர ஆசிரியர் உயிரிழப்பு
சென்னையில் போராட்டத்தில் கைதானபோது தற்கொலைக்கு முயன்ற பகுதி நேர ஆசிரியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெரம்பலூர் மாவட்டம் நெய்குப்பை அரசு உயர் நிலை பள்ளியில் உடற்கல்வி பகுதி நேர ஆசிரியராக பணியாற்றிய கண்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- 14 Jan 2026 5:54 PM IST
சபரிமலையில் தவெக கொடி
சபரிமலையில் தவெக தொண்டர் ஒருவர், நடைபந்தலில் இருந்து 18ம் படி வரை, தவெக கொடியை உயர்த்தி பிடித்தபடியே சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 18ம் படி ஏறும் முன் பிடித்த காவல்துறையினர் அறிவுரை வழங்கியபின், அந்த தொண்டர் கொடியை மடக்கி வைத்து 18ம் படியை ஏறி சென்றார்.
- 14 Jan 2026 5:22 PM IST
கைது செய்யப்படுபவர்களுக்கு மரண தண்டனை - ஈரான் நீதித்துறை எச்சரிக்கை
ஈரானில் அரசுக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டம் நடத்திவரும் நிலையில், போராட்டத்தில் ஈடுபடுபட்டு கைது செய்யப்படுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என ஈரான் நீதித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
- 14 Jan 2026 5:19 PM IST
கே.எல்.ராகுல் சதம்
நியூசிலாந்து அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில் கே.எல்.ராகுல் சதம் விளாசி அசத்தி உள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இது கே.எல்.ராகுலின் 8வது சதம் ஆகும்.
- 14 Jan 2026 4:55 PM IST
சிறப்பு ரெயில்கள் ரத்து
வரும் 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தாம்பரம் முதல் கன்னியாகுமரி வரை இயக்கப்பட இருந்த சிறப்பு ரெயில் மற்றும் சென்னை சென்ட்ரல் - கோவை இடையே இயக்கப்பட இருந்த சிறப்பு ரெயில் உட்பட 5 சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
- 14 Jan 2026 4:53 PM IST
முதல்-மந்திரி ரங்கசாமிக்கு அழைப்பு
எல்.ஜே.கே. சார்பில் வரும் 17, 18 தேதிகளில் துறைமுக மைதானத்தில் நடைபெறவுள்ள பொங்கல் திருவிழாவுக்கு அனுமதி கேட்டு எல்.ஜே.கே. தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் முதல்-மந்திரி ரங்கசாமியை சட்டசபையில் சந்தித்து கோரிக்கை வைத்து, விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.
- 14 Jan 2026 4:50 PM IST
ஓபிஎஸ்க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய செங்கோட்டையன்
சகோதரர் ஓபிஎஸ் அவர்களுக்கு எனது மனமாந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்து என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தவெக நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன்.
- 14 Jan 2026 4:21 PM IST
98வது ஆஸ்கர் விருதுக்கான தகுதி பட்டியலில் ‘தி டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தைத் தொடர்ந்து தமிழில் உருவாகியுள்ள ‘கெவி’ திரைப்படமும் இடம்பெற்றுள்ளது
- 14 Jan 2026 4:20 PM IST
அமைச்சருடன் இடைநிலை ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை நிறைவு
சென்னையில் 20 நாட்களாக போராடி வந்த இடைநிலை ஆசிரியர் சங்கங்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் நடத்திய பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. சங்கங்களுடன் சேர்ந்து ஆலோசித்த பிறகு முடிவெடுத்து அறிவிப்போம் என ஆசிரியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.


















